எழிலின் தோளில் சாய்ந்த சுடர்.. கடுப்பான மனோகரி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், ஆசிரமத்தில் திடீரென ஒரு பெண்ணுக்கு பிரசவ வலி வர, அந்த பெண் மிகவும் வீக்காக இருப்பதால், மருத்துவமனைக்கு போக நேரம் இல்லை. இதனால், இங்கே பிரசவம் பார்க்க வேண்டும். நீ தான் உதவி பண்ண வேண்டும் என்று சொல்ல சுடர் முடியாது என்று அழுகிறாள்.
இதையடுத்து சுடரிடம் கோபப்பட்ட எழில், என்ன எல்லாத்துக்கும் முடியாது முடியாதுனு சொன்னா என்ன அர்த்தம், இரண்டு உயிரை காப்பாற்ற வேண்டிய கடமை நம்மக்கிட்ட தான் இருக்கு என்று சொல்லி அந்த பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து இன்றைய எபிசோடில், சுடர் பெண்களைப் பற்றியும் பெண்களின் வலிகளை பற்றியும் பேசி கண்ணீர் விடுகிறாள். நீங்க ரொம்ப நல்லவர் சார் என்று எழிலை பற்றியும் பேசி கண் கலங்குகிறார். நான் எதுக்கு அழுறேன்னு தெரியல ஆனா அழறேன் என்று அழுது அப்படியே மயங்கி ஏழில் மீது சாய்ந்து கொள்கிறாள்.
இவர்கள் இருவரும் வீட்டுக்கு வர மனோகரியும் செல்வியும் மாடியில் இருந்து இதை பார்த்து கடுப்பாகின்றனர். பிறகு மனோகரி சுடரிடம் என்ன ஆச்சு என்று கேட்க அவள் பதில் ஏதும் சொல்லாமல் செல்கிறாள். பிறகு எழிலிடம் என்ன விஷயம் என்று கேட்க அவ வேற ஒரு ஃபீலிங்ஸ்ல இருக்கா உனக்கு சொன்னா புரியாது என்று சொல்லி அவனும் உள்ளே சென்று விடுகிறான்.

கடுப்பான மனோகரி: திரும்பவும் மனோகரி சுடரை சந்தித்து என்ன விஷயம் என்று கேட்க இந்துமதி காதல் கதையைப் பற்றி சொல்ல காண்டாகிறாள். உடனே ஸ்டோர் ரூமுக்கு சென்று அங்கிருக்கும் இந்துமதி போட்டோவை பார்த்து எல்லாம் உன்னால தான் என்று இந்துவை கோபப்பட்டு திட்டுகிறார். ப்ளாஷ் பேக்கில், எழில் இந்துவிடம் காதலை சொல்லிய தினத்தில் மனோகரி தன்னிடம் தான் காதலை சொல்லுவான் என எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்தது தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











