வேலுவிடம் சிக்கிய சுடர்.. இனி நடக்க போவது என்ன? நினைத்தேன் வந்தாய் சீரியல் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும் எழில் குழந்தைகளிடம் அன்பாக பேசிட்டு வெளியே வருகிறான். அப்போது குட்டி பாப்பா மட்டும் அம்மாவை மறக்க முடியாமல், அவளின் புடவையை வைத்து தூங்குவதைப் பார்த்து வருத்தப்படுகிறான்.
இதையடுத்து, வெளியில் வரும் ஏழில், சுடர் ரூமில் ஏதோ முணங்கல் சத்தம் கேட்க உள்ளே சென்று அவளை பார்க்கிறான். சுடருக்கு காய்ச்சல் வந்திருக்கிறது. இதைப்பார்த்து பதறிப்போன எழில் சுடருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொள்கிறான். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில் மாத்திரை மருந்து கொடுத்தும் சுடருக்கு காய்ச்சல் குறையாததால், அவளை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடிவு செய்கிறான். சுடரால் எழுந்து கூட நிற்க முடியாமல் இருப்பதால், அவளை கை தாங்கலாக அழைத்து வந்து காரில் உட்காரவைத்து ஹாஸ்பிடலுக்கு அழைத்து வருகிறான். காரில் இருக்கும் சுடர் வேலுவை நினைத்து பயந்து, என்னை வெளியில் அனுப்பிடாதீங்க, எனக்கு பயமா இருக்கு என்று காய்ச்சலில் புலம்ப, எழில் அவளை சமாதானப்படுத்துகிறான்.
பயத்தில் புலம்பும் சுடர்: எழில், சுடருடன் வெளியில் போனதை பார்த்த சமையல்காரி செல்வி, மனோகரியிடம் சென்று நீங்க இங்க ஜாலியாக இருக்கீங்க என்று சொல்ல அவள் டென்சன் ஆகிறாள். ஹாஸ்பிட்டலுக்கு வந்த எழில் சுடருக்கு ட்ரீட்மெண்ட் கொடுத்து அவளை பக்கத்தில் இருந்தே பார்த்து கொள்கிறான், சுடர் காய்ச்சலில் பயப்பட எழில் பயப்படாதீங்க நான் பக்கத்தில் தான் இருக்கேன் என்று ஆறுதல் சொல்கிறான். மறுபக்கம் வேலு சுடரை தேடி ஹாஸ்பிடலுக்கு வர முடிவெடுக்கிறான்.
வேலுவிடம் சிக்கிய சுடர்: ஹாஸ்பிடலுக்கு வரும் மனோகரி, எழிலிடம் நீங்க போங்க சுடரை நான் பார்த்துக்கறேன் என்று பேசி அவனை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறாள். எழில் வெளியேறியதும் மனோகரி சுடரிடம் சென்று அதான் காய்ச்சல் போய்டுச்சுல நீயும் கிளம்பு என துரத்தி விடுகிறாள். இதையடுத்து, சுடர் வீட்டிற்கு கிளம்பி வர வேலு ஹாஸ்பிடலுக்கு வர சுடரை பார்த்து விடுகிறான், உடனே அவளை சுற்றி வளைத்து மடக்கி பிடிக்கிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











