வேலுவுடன் கூட்டணி சேர்ந்த மனோகரி.. சிக்கலில் சிக்கும் சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், அசிரமத்தில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்துவிட்டு சுடர் பெண்களைப் பற்றியும் பெண்களின் வலிகளை பற்றியும் பேசி கண்ணீர் விட்டு அழுதுக்கொண்டு வருகிறாள். நீங்க ரொம்ப நல்லவர் சார் என்று எழிலை பற்றியும் பேசி கண் கலங்குகிறார். நான் எதுக்கு அழுறேன்னு தெரியல ஆனா அழறேன் என்று அழுது அப்படியே மயங்கி ஏழில் மீது சாய்ந்து கொள்கிறாள்.

இவர்கள் இருவரும் வீட்டுக்கு வர மனோகரியும் செல்வியும் மாடியில் இருந்து இதை பார்த்து கடுப்பாகின்றனர். மனோகரியிடம் சுடரை சந்தித்து என்ன விஷயம் என்று கேட்க இந்துமதி காதல் கதையைப் பற்றி சொல்ல காண்டாகிறாள். உடனே ஸ்டோர் ரூமுக்கு சென்று அங்கிருக்கும் இந்துமதி போட்டோவை பார்த்து எல்லாம் உன்னால தான் என்று இந்துவை கோபப்பட்டு திட்டுகிறாள். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து இன்றைய எபிசோடில், மனோகரி பாஸ்போர்ட் ஆபிசுக்கு வந்து தமிழ் குறித்து விசாரிக்க அவள் தான் சுடர் என்பதும், அவன் வெளிநாடு செல்ல முயற்சி செய்து வருவதும் தெரிய வருகிறது. அதன் பிறகு வேலுவை சந்தித்து நீ உண்மையாக தமிழைப் பிடிச்சு என்ன பண்ண போற.? அவளை எழில் கிட்ட ஒப்படைச்சாலும் சின்ன தப்பு தான் என்பதனால் மன்னிச்சிடுவான். நான் சொல்ற மாதிரி பண்ணா சுடர் உனக்குத்தான் என்று ஒரு ஐடியாவை கொடுக்கிறாள்.

சந்தேகப்படும் மனோகரி: அதன் பிறகு சுடர் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டு இருப்பதை பார்த்து, எழில் சந்தோஷப்படுகிறான். அப்போது அங்கு வரும் மனோகரி, சுடர் என்று கூப்பிட தமிழ், டக்கென்று திரும்பி பார்க்க என்னாச்சு என்று கேட்க கூப்பிட்ட மாதிரி இருந்தது என்று சொல்கிறாள். மனோகரி இல்ல போன்ல பேசிட்டு இருந்தேன் என்று சொல்லி சமாளிக்க சுடர் குழப்பமாகவே இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











