சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், வேலுவுடன் கூட்டு சேர்ந்த மனோகரி, வேலு குழந்தைகளை கடத்தும் பெண்ணான தமிழ் போட்டோவுக்கு பதிலாக சுடர் போட்டோவை மாற்றி வைத்து விடுகிறான். இதனையடுத்து போலீஸ் சுடரை தேடி எழில் வீட்டிற்கு வருகிறது.
போலீஸ் இதுவரை அவ 80 குழந்தைகளுக்கு மேல் கடத்தி இருக்கா என்று சொல்ல கனகவல்லி அதிர்ச்சி அடைகிறாள். எழிலுக்கு போன் போட்டு கனகவல்லி நாம ஏமாந்துட்டோம் பா. தமிழ் நல்லவள் இல்ல, குழந்தைகளை கடத்துற கும்பலை சேர்ந்தவள் என்று சொல்றாங்க என்று அழுகிறாள். இதையடுத்து, சுடர் குழந்தைகளுடன் வந்து கொண்டிருந்த காரை ரவுடிகள் சுற்றிவளைத்து குழந்தைகளை கடத்த முயற்சிக்க சுடர் குழந்தைகளை காப்பாற்றி ஒரு குடோனுக்குள் ஓடி ஒளிகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்: நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில், சுடர் குழந்தைகளுடன் ஒரு குடோனுக்குள் இருக்க ரவுடிகள் அவளையும் குழந்தைகளையும் சுற்றி வளைக்கின்றனர். அங்கு வரும் எழில் ரவுடிகளை அடித்து போட்டு குழந்தைகளை காப்பாற்ற போலீசும் அங்கு வந்து விடுகிறது. சுடர் குழந்தைகளை கடத்துறாங்க சார் என்று சொல்ல நீயே ஒரு பெரிய கடத்தல் காரி என சுடரை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். எழில் பதில் ஏதும் பேசாமல் நிற்கிறான். அதன் பிறகு குழந்தைகளிடம் இனி தமிழ் உங்களுக்கு கேர் டேக்கர் கிடையாது என சொல்லி வீட்டுக்கு அழைத்து வருகிறான்.
அடித்து விசாரிக்கும் போலீஸ்: பிறகு போலீஸ் எழிலுக்கு போன் போட்டு நேரில் வந்து கம்ப்ளைன்ட் எழுதி தர சொல்ல எழில் குழந்தைகளிடம் எங்களுக்கு தமிழ் யாருன்னே தெரியாது கொஞ்ச நாளாக தான் அவ இங்க இருக்கா என்று சொல்லணும் என்று ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறான். ஸ்டேஷனில் போலீஸ் சுடரை அடித்து விசாரிக்கின்றனர்.
தமிழ் நல்ல பெண்ணு: ஸ்டேஷனுக்கு வரும் எழில் கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுக்க ராமையா அந்த பொண்ணு மேல தப்பு கிடையாது அது குழந்தைகளை தான் காப்பாத்துச்சு என்று சொல்ல எழில் கொஞ்சம் அமைதியா இருங்க என்று சத்தம் போடுகிறான். அஞ்சலி மட்டும் ஜெயிலுக்குள் இருக்கும் சுடரின் கையைப் பிடித்து அழ அவளும் அஞ்சலியை பார்த்து அழுகிறாள். எழில் அஞ்சலியை திட்டி வீட்டிற்கு அழைத்து வந்து விடுகிறான்.
ராமையா சொன்னதை கேட்ட போலீஸ் சுடரை கூப்பிட்டு உன்னுடைய உண்மையான பெயர் என்ன நீ எதுக்கு தமிழ் என்ற பெயரில் அந்த வீட்ல இருக்க என்று விசாரிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











