கதறி அழுத அஞ்சலி.. சுடரை நேரம் பார்த்து கடத்திய வேலு.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், மனோகரி, வேலுவுடன் சேர்ந்துக் கொண்டு, சுடரை பெரிய வலையில் சிக்க வைக்க திட்டம் போட்டு, குழந்தைகளை கடத்தும் பெண்ணின் போட்டோவுக்கு பதிலாக சுடர் போட்டோவை மாற்றி வைத்து விடுகிறான். இதனையடுத்து போலீஸ் சுடரை தேடி எழில் வீட்டிற்கு வருகின்றனர்.
இதையடுத்து, சுடர் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் போது, ரவுடி கும்பல் ஒன்று அவர்களை துரத்த. சுடர் குழந்தைகளுடன் ஒரு குடோனுக்குள் மறைந்து கொள்ள,அங்கு வரும் எழில் ரவுடிகளை அடித்து போட்டு குழந்தைகளை காப்பாற்றிவிடுகிறான். இந்த நேரத்தில், அங்கு வரும் போலீஸ், கடத்தல்காரி என்று கூறி சுடரை கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். இதையடுத்து, காவல் நிலையத்திற்கு வரும் எழில், எங்களுக்கு தமிழ் யாருனே தெரியாது கொஞ்ச நாளாக தான் அவ இங்க இருக்கா என்று எழுதி கொடுக்கிறார்.

மேலும், சுடரை விசாரித்த போலீஸ், அவள் கடத்தல்காரி இல்லை என்பதை புரிந்து கொண்டு வெளியில் அனுப்ப, எழில் வீட்டுக்கு வரும் சுடர் வருகிறாள். அப்போது மனோகரி, சுடர் மீண்டும் இந்த வீட்டிற்குள் வர கூடாது என திட்டம் போட்டு நீ என்ன சொன்னாலும் இனிமே நாங்க நம்ப போறது இல்ல என்று திட்டி அவளை பேக்கை தூக்கி போட்டு துரத்தி விடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், எழில் அஞ்சலியை மிரட்டி சாப்பிட வைக்கிறான். மனோகரி இப்படியே விட்டால் வேலைக்கு ஆகாது என்று வேலுவுக்கு போன் போட்டு இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க? அதான் சுடரை வீட்டை விட்டு வெளியே துரத்திட்டேன்ல அவ கழுத்துல சீக்கிரம் தாலியை கட்டு என்று சொல்கிறாள். இதையடுத்து, வேலு சுடரை தேடி போனதையும் அவள் காணாமல் போன விஷயத்தையும் சொன்ன மனோகரி சீக்கிரம் தேடி கண்டுபிடித்து கல்யாணத்தை முடி என்று சொல்கிறாள். அதன் பிறகு சுடர் பாட்டி கடையில் சாப்பிட்டுக் கொண்டிருக்க இடி மின்னலுடன் மழை பெய்கிறது.
பயந்து அழும் அஞ்சலி : இடி சத்தம்கேட்டு பயந்து எழுந்த அஞ்சலி இடிக்கு பயந்து எல்லோரையும் எழுப்ப யாரும் எழுந்து கொள்ளாத நிலையில் தமிழ், தமிழ் என சொல்லிக்கொண்டு அம்மாவின் புடவையை எடுத்து வர அது ஒரு இடத்தில் மாட்டிக் கொண்டு வராமல் இருக்க தமிழ் ரூமுக்குள் சென்று ஓரமாக உட்கார்ந்து அழுகிறாள். இடி இடிப்பதை பார்த்ததில் தமிழுக்கு அஞ்சலி ஞாபகம் வர எழில் வீட்டுக்கு ஓடி வந்து வெளியே நின்று அஞ்சலி அஞ்சலி என்று கூப்பிட தமிழின் குரலை கேட்ட அஞ்சலி ஜன்னல் கதவை திறந்து பார்த்து எமோஷனலாக ஃபீல் பண்ணுகிறாள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள எழில் குழந்தைகள் பயப்படுவார்கள் என்று ரூமுக்கு வர அஞ்சலி காணாமல் போனதை பார்த்து தேடுகிறான்.
வேலுவிடம் சிக்கிய சுடர்: தமிழின் ரூமில் இருக்கும் அஞ்சலி பார்த்த அவன் தமிழ் வெளியே நிற்பதையும் பார்த்து ஜன்னலை சாத்தி அவ கூட எல்லாம் பேசக்கூடாது என்று தமிழை கூட்டிச் சென்று விடுகிறான். இந்த இடைப்பட்ட கேப்பில் வேலு தமிழை அடித்து கடத்தி விடுகிறான். எழில் மீண்டும் ஜன்னல் வழியாக பார்க்க தமிழ் அங்கு இல்லை. அடுத்து வேலு தமிழை ஒரு ரூமுக்குள் அடைத்து வைத்து நாளைக்கு உனக்கும் எனக்கும் கல்யாணம் என அதிர்ச்சி கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











