தமிழ் இல்லாத ஏக்கத்தில் அஞ்சலி..வேலுவிடம் சிக்கிய தமிழ்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், இடி சத்தம்கேட்டு பயந்து எழுந்த அஞ்சலி தமிழ், தமிழ் என அழுதுக்கொண்டு இருக்கிறாள். இடி சத்தத்தை கேட்கும் தமிழுக்கும் அஞ்சலி ஞாபகம் வர, கொட்டும் மழையிலும் எழில் வீட்டுக்கு ஓடி வந்து வெளியே நின்று அஞ்சலி அஞ்சலி என்று கூப்பிட தமிழின் குரலை கேட்ட அஞ்சலி ஜன்னல் கதவை திறந்து பார்த்து எமோஷனலாக இருவரும் ஃபீல் பண்ணுகிறார்கள்.

இந்த நேரம் வெளியே வரும் எழில், தமிழ் ரோட்டில் நிற்பதையும். அஞ்சலி அவளைப் பார்த்து பேசுவதையும் பார்த்த எழில், ஜன்னலை சாத்து அவ கூட எல்லாம் பேசக்கூடாது என்று அஞ்சலியை கூட்டிச் சென்று விடுகிறான். இந்த நேரத்தில், அங்கு வரும் வேலு தமிழை அடித்து கடத்தி விடுகிறான். தமிழை ஒரு ரூமுக்குள் அடைத்து வைத்து நாளைக்கு உனக்கும் எனக்கும் கல்யாணம் என அதிர்ச்சி கொடுக்கிறான். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil television Ninaithen Vandhai serial April 29th today episode

தமிழுக்காக ஏங்கும் அஞ்சலி: இதையடுத்து நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில், அஞ்சலிக்கு உடம்பு முடியாமல் போக அவளை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்கின்றனர். எழில் அஞ்சலிக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்க மற்றொரு டாக்டரும் அஞ்சலிக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கிறார், ஆனால் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் அஞ்சலி, தமிழ்.... தமிழ்.... என புலம்புவதை கேட்கும் டாக்டர், யார் அந்த தமிழ், அஞ்சலியை குணப்படுத்த தமிழ் என்ற அந்த பெண்ணால் மட்டும் தான் முடியும் என்று சொல்ல கனகவல்லி அதிர்ச்சி அடைகிறாள்.

கண்கலங்கி நிற்கும் எழில்: இதையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் எழில் கலங்கி நிற்க, அஞ்சலிக்காக அந்த பெண்ணை கூட்டிட்டு வா பா என்று சொல்லி கண் கலங்குகிறாள் கனகவல்லி. அப்போது, அங்கிருக்கும் மனோகரி, எதுக்கு ஆண்ட்டி அவளை கூட்டிட்டு வரணும் என்று கேட்க, டாக்டர் சொன்னதை நீ கேட்கலையா என்று மனோகரி மீது கோவப்படுகிறாள். இதைத் தொடர்ந்து எழில் எதையோ யோசித்து கொண்டு இருக்க, இப்படியே விட்டால் எழில் மனசு மாறிவிடுவான் என்று நினைக்கும் மனோகரி. சிட்டியிலேயே பெரிய டாக்டர் நீ, உன்னோட மருத்தால குணப்படுத்த முடியாதா… தமிழ் வந்து என்ன செய்ய போறா என்று திசை திருப்புகிறாள்.

தமிழை தேடி அலையும் அபி: இதை கவனித்துக்கொண்டிருந்த கவின், அஞ்சலிக்காக தமிழை கூட்டிட்டு வாங்க, இல்லனா நாங்க போய் கூட்டிட்டு வரோம் என்று சொல்ல, தேவையில்லாமல் எதையும் பேசாதீங்க என்று அவர்களை திட்டி அனுப்புகிறான். இதையடுத்து, அபி நாம போய் தமிழை கூட்டிட்டு வரலாம் என்று சொல்ல கவின் அப்பாவுக்கு தெரிந்தால் அவ்வளவு தான் என்று பயப்படுகிறான். அஞ்சலிக்காக நாம இதை செய்துதான் ஆகவேண்டும் என்று சொல்கிறாள்.

உடனே கவின், நாம எங்க போய் தமிழை தேடுறது என்று கேட்க வீட்டுக்கு போனால் ஏதாவது ஐடியா கிடைக்கும் ...வா வீட்டுக்கு போகலாம் என்று கனகவல்லியிடம் வீட்டிற்கு போறோம் என்று சொல்லி விட்டு வீட்டிற்கு வருகின்றனர். வீட்டிற்கு வந்ததும் நேராக இருவரும் தமிழ் இருந்த அறைக்கு என்று அவளது ரூமை ஆராய்கின்றனர், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X