வேலுவை அடித்து துரத்திய எழில்.. நன்றி கூறிய சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில்சுடருக்கு காய்ச்சல் குறையாததால், அவளை ஹாஸ்ப்பிட்டலுக்கு எழில் அழைத்து ட்ரீட்மெண்ட் கொடுத்து அவளை பக்கத்தில் இருந்தே பார்த்து கொள்கிறான், சுடர் காய்ச்சலில் பயப்பட எழில் பயப்படாதீங்க நான் பக்கத்தில் தான் இருக்கேன் என்று ஆறுதல் சொல்கிறான்.

ஹாஸ்பிடலுக்கு வரும் மனோகரி, எழிலிடம் நீங்க போங்க சுடரை நான் பார்த்துக்கறேன் என்று பேசி அவனை வீட்டிற்கு அனுப்பி வைக்கிறாள். எழில் வெளியே சென்றதும். மனோகரி சுடரிடம் சென்று அதான் காய்ச்சல் போய்டுச்சுல நீயும் கிளம்பு என துரத்தி விடுகிறாள். சுடர் வீட்டிற்கு கிளம்பி வர, வேலு ஹாஸ்பிடலுக்கு வர சுடரை பார்த்து விடுகிறான், உடனே அவளை சுற்றி வளைத்து மடக்கி பிடிக்கிறான் இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil television Ninaithen Vandhai serial April 2nd today episode

இன்றைய எபிசோடு: அதாவது வேலு சுடரை பிடித்து விட சுடர் செய்வதறியாது தவித்து,வேலுவை ஏமாற்றி ஓடிவர, அந்த நேரம் பார்த்து எழில் கார் பார்க்கிங்கில் போன் பேசிக்கொண்டு இருக்க, சுடர் காப்பாற்றுங்க என்று கூறிக்கொண்டே எழிலின் பின்னால் மறைந்து கொள்கிறாள். இதனால் எழிலுக்கும் வேலுவுக்கும் மோதல் உருவாகிறது. வேலு எழிலை தாக்க பதிலுக்கு எழில் வேலுவை அடித்து கீழே தள்ளுகிறான். நீ யாரா வேணால் இரு, ஆனால் தமிழ் என் வீட்டில் இருக்கும் வரை நான் தான் அவளுக்கு பாதுகாப்பு என்று சுடரை காப்பாற்றி வேலுவை போலீசில் பிடித்து கொடுக்கிறான்.

நன்றி சொன்ன சுடர்: கீழ ஏதோ பிரச்சனை நடப்பதை பார்த்து ஓடி வரும் மனோகரி, யார் இவன், என்ன பிரச்சனை என்று கேட்க, சுடரை இப்போ எதுவும் கேட்காத அவள் பயந்து போய் இருக்கா இப்போதைக்கு எதுவும் கேட்க வேண்டாம் என்று எழில் சொல்லி அழைத்து வருகிறான். சுடர் காரில் வரும் போது குற்ற உணர்ச்சியுடன் மன்னிப்பும் நன்றியும் சொல்லி கொண்டே வர எழில் எதுவும் பேசாமல் வருகிறான். பிறகு அப்பாவுக்கு போன் செய்து வேலு வந்த விஷயத்தையும் தன்னை எழில் காப்பாற்றிய விஷயத்தையும் சொல்கிறாள்.

எழில் சார் வீட்டில் இருக்கும் வரை நான் பாதுகாப்பாக இருப்பேன் என்று சொல்ல அவர் நீ எங்கயும் போகாத, அந்த தம்பிக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியல என்று சொல்லி கண் கலங்குகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X