தமிழை தேடி அலையும் அபி.. கத்தியை காட்டி மிரட்டிய வேலு.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில் மருத்துவமனையில் இருக்கும் அஞ்சலி, தமிழ்.... தமிழ்.... என புலம்புவதை கேட்கும் டாக்டர், அஞ்சலியை குணப்படுத்த தமிழ் என்ற அந்த பெண்ணால் மட்டும் தான் முடியும் என்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் எழில் கலங்கி நிற்க, அஞ்சலிக்காக அந்த பெண்ணை கூட்டிட்டு வா பா என்று சொல்லி கண் கலங்குகிறாள் கனகவல்லி.

இதை கவனித்துக்கொண்டிருந்த கவின், அஞ்சலிக்காக தமிழை கூட்டிட்டு வாங்க, இல்லனா நாங்க போய் கூட்டிட்டு வரோம் என்று சொல்கின்றனர். எழில் தமிழை தேட எந்த முயற்சியும் செய்யாததால், அபி, கவின், நாம எங்க போய் தமிழை தேடலாம் என்று நேராக வீட்டிற்கு வந்து, தமிழ் இருந்த அறைக்கு என்று அவளது ரூமை ஆராய்கின்றனர், இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil television Ninaithen Vandhai serial April 30th today episode

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில் அபி, கவின் இருவரும் வீட்டை ஆராய அப்போது தமிழின் போன் கிடைக்கிறது. அதில், தமிழின் அப்பா பதற்றத்துடன் பேசுகிறார். என் மகளுக்கு என்ன ஆச்சுனு தெரியலேயே என்று புலம்ப என்ன விஷயம் என்று இருவரும் கேட்கின்றனர். அப்போது, வேலு, தமிழை கடத்திவிட்டதாகவும், அவளை கட்டாயப்படுத்தி திருமணம் செய்யப்போவதாகவும் சொல்கிறார்.

தேடி அலையும் அபி: இதையடுத்து அபி மற்றும் கவின் இருவரும் தமிழின் போட்டோவை வைத்துக்கொண்டு ரோடு ரோடாக அலைகின்றனர். மனோகரி வேலுவுக்கு போன் செய்து தமிழைத் தேடி குழந்தைகள் வந்தாலும் வருவாங்க என்று தகவல் கொடுத்து விடுகிறாள். அதே போல் கவினும் அபியும் ஒரு வீட்டின் கதவை தட்ட வேலு வெளியே வருகிறான். சுடரின் போட்டோவை காட்டி இவங்களை பார்த்தீங்களா என்று விசாரிக்க வேலு ரவுடிகளை வைத்து குழந்தைகளை கடத்துகிறான்.

அடுத்து என்ன நடக்கப்போகிறது: கல்யாணத்துக்கு நோ சொல்லி கொண்டிருக்கும் சுடர் கவினின் குரலை கேட்டு வெளியே ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். அபி அஞ்சலி நீ வந்தா தான் கண் முழிப்பா என்று ஹாஸ்பிடலில் இருக்கும் விஷயத்தை சொல்ல தமிழ் அதிர்ச்சி அடைகிறாள். வேலு ஒழுங்கு மரியாதையா கல்யாணத்துக்கு ஒத்துக்க என்று மிரட்ட தமிழ் முடியாது என்று சொல்ல அபி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்ட அவள் வேறு வழியின்று கல்யாணத்துக்கு சம்மதம் தெரிவிக்கிறாள்.

தமிழைத் தேடி அலையும் எழில் கவின் வரைந்த டிராயிங் பேப்பரை பார்த்து விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X