நன்றி சொல்ல காத்திருக்கும் சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடு அப்டேட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், சுடரிடம் வம்பு செய்த எழில் வேலுவை அடித்து கீழே தள்ளுகிறான். நீ யாரா வேணால் இரு, ஆனால் தமிழ் என் வீட்டில் இருக்கும் வரை நான் தான் அவளுக்கு பாதுகாப்பு என்று சுடரை காப்பாற்றி வேலுவை போலீசில் பிடித்து கொடுக்கிறான்.
இதையடுத்து, சுடர் காரில் வரும் போது குற்ற உணர்ச்சியுடன் மன்னிப்பும் நன்றியும் சொல்லி கொண்டே வர எழில் எதுவும் பேசாமல் வருகிறான். பிறகு அப்பாவுக்கு போன் செய்து வேலு வந்த விஷயத்தையும் தன்னை எழில் காப்பாற்றிய விஷயத்தையும் சொல்கிறாள். எழில் சார் வீட்டில் இருக்கும் வரை நான் பாதுகாப்பாக இருப்பேன் என்று சொல்ல அவர் நீ எங்கேயும் போகாத, அந்த தம்பிக்கு எப்படி நன்றி சொல்றதுனு தெரியல என்று சொல்லி கண் கலங்குகிறார். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு: இதையடுத்து, நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில், சுடரும் அப்பாவும் பேசி கொண்டிருக்கும் போது அவளது சித்தி ரேணுகா போனை வாங்கி இவர்கள் பேசுவதை கேட்டு போனை தூக்கி போட்டு உடைக்கிறாள். இதனையடுத்து சுடர் அஞ்சலியிடம் எழிலுக்கு நன்றி சொல்வது போல பேச அவளும் புரியாமல் யாருக்கு நன்றி சொல்ற என்று கேட்க கடவுளுக்கு நன்றி என்று சொல்லி சமாளிக்கிறாள்.
விதவிதமான சமையல்: எழிலுக்கு எப்படியாவது நன்றி சொல்ல வேண்டும் என்று யோசிக்கும் சுடர் விதவிதமாக சமைத்து அசத்த முடிவெடுக்கிறாள். உடனே,விதவிதமாக சமைத்து டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைக்க கனகவல்லியும் கணக்கு பிள்ளையையும் யாருக்காக இவ்வளவு சமைக்கிற என்று கேட்க எழில் சாருக்காக தான், பசங்களும் சாப்பிடட்டும் என்று சொல்ல அவன் இதெல்லாம் சாப்பிட மாட்டான். கோபம் தான் படுவான் என்று சொல்கின்றனர். ஆனால் சுடர் நான் சாப்பிட வைக்கிறேன் என்று சொல்கிறாள்.
ரசித்து சாப்பிடும் எழில்: அடுத்து சாப்பிட வரும் எழில் வெரைட்டி வெரைட்டியாக இருப்பதை பார்த்து எதுக்கு இதெல்லாம் செய்த? இது எல்லாத்தையும் எடுத்துட்டு போ வழக்கமாக சாப்பிடுவதை கொண்டு வா என்று சொல்ல சுடர் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் நான் சமைத்ததை சாப்பிடுங்க என்று சொல்கிறாள். ஆனால் எழில் வேண்டாம் என்று சொல்லி விட்டு எழுந்து செல்கிறான்.
கீரை எல்லாம் எவ்வளவு ஹெல்த்தி, இதெல்லாம் உங்களுக்கே தெரியும். ஒரே ஒரு நாள் சாப்பிட்டு பாருங்க, பிடிக்கலைன்னா இனிமே நான் சமைக்க மாட்டேன் என்று சொல்ல எழில் சாப்பிட உட்கார எல்லாமே சூப்பராக இருக்கு என்று ரசித்து சாப்பிடுகிறான், குழந்தைகள் வாசனை நல்லா வருது எல்லாம் வித்தியாசமா இருக்கு. அப்பாவும் சாப்பிடுறாரு என்று வித்தியாசமாக பார்க்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











