சுடரை பாசத்தால் அரவணைக்கும் அஞ்சலி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடு!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், வேலு சுடருக்கு போன் போட்டு அந்த டாக்டர் காப்பாத்திட்டானு சந்தோஷமா இருக்கியா? நான் இங்க இருந்து போகும்போது உன் கழுத்துல தாலி கட்டி என் பொண்டாட்டியாக கூட்டிட்டு போவேன் என மிரட்ட சுடர் அதிர்ச்சி அடைகிறாள்.
வேலுவுக்கு பயந்து ரூமை விட்டே வெளியே வராமல் இருக்க , குழந்தைகளை ஸ்கூலில் இருந்து கூப்பிடக்கூட போகாமல் வீட்டிற்குள்ளே பயந்து கிடக்கிறாள். பள்ளிக்கூடத்திற்கு சுடர் வராததால், அஞ்சலி வருத்தப்பட்டு, டிரைவரிடம் ஏன் அஞ்சலி வரவில்லை என்று வருத்தப்பட்டு கேட்கிறாள் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு: சுடர் வேலு பேசியதை நினைத்து வீட்டை விட்டு வெளியே வரவே வராமல் பயத்தால் ரூமுக்குள்ளவே அடைந்து கிடக்கிறாள். மறுபக்கம் மனோகரி சிசிடிவி காட்சிகளை வைத்து சுடரை துரத்திய வேலுவுடன் இருந்த போலீசிடம் பேசி பிரச்னையை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய போலீஸ்காரர் வெளியூர் சென்றிருப்பதால் அது முடியாமல் போகிறது. இங்கே சுடர் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கவோ, பாடம் சொல்லி கொடுக்க, ஸ்கூல் கூட்டி செல்ல என எதுக்குமே வெளியே வராமல் இருக்க அஞ்சலி சுடரை மிஸ் பண்ணுகிறாள். ராமையா சுடருக்கு உடம்பு சரியில்லை என்று சொல்கிறார்.

தாயாக மாறிய அஞ்சலி: ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வந்த அஞ்சலி சாப்பாட்டை எடுத்து கொண்டு ரூமுக்கு வருகிறாள், சாப்பிட்டாயா என்று கேட்க சுடர் இல்லை என்று சொல்ல, சாப்பிட்டா தானே மாத்திரை போட முடியும், மாத்திரை போட்டா தானே உடம்பு சரியாகும் என்று சொல்லி ஆ காட்டு என்று சாப்பாட்டை ஊட்டி விடுகிறாள். அஞ்சலியின் பாசத்தை பார்த்து சுடர் அவளை கட்டி பிடித்து கண் கலங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











