சுடரிடம் அஞ்சலி வாங்கிய சத்தியம்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், வேலு பேசியதை நினைத்து வீட்டை விட்டு வெளியே வராமல் பயத்தால் ரூமுக்குள்ளேயே அடைந்து கிடக்கிறாள் சுடர். குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுக்கவோ, பாடம் சொல்லி கொடுக்க, ஸ்கூல் கூட்டி செல்ல என எதுக்குமே வெளியே வராமல் இருக்க அஞ்சலி சுடரை மிஸ் பண்ணுகிறாள். ராமையா சுடருக்கு உடம்பு சரியில்லை என்று சொல்கிறார்.

ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வந்த அஞ்சலி சாப்பாட்டை எடுத்து கொண்டு ரூமுக்கு வருகிறாள், சாப்பிட்டாயா என்று கேட்க சுடர் இல்லை என்று சொல்ல, சாப்பிட்டா தானே மாத்திரை போட முடியும், மாத்திரை போட்டா தானே உடம்பு சரியாகும் என்று சொல்லி சாப்பாட்டை ஊட்டி விடுகிறாள். அஞ்சலியின் பாசத்தை பார்த்து சுடர் அவளை கட்டி பிடித்து கண் கலங்குகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

Zee tamil television Ninaithen Vandhai serial April 8th today episode

இன்றைய எபிசோட்: நினைத்தேன் வந்தாய் இன்றைய நிகழ்ச்சியில், சுடர் எழிலிடம் தன்னை பற்றிய உண்மைகளை சொல்ல முடிவெடுத்து ஹாஸ்பிடலுக்கு வருகிறாள். இந்த நேரத்தில், டூப்ளிகேட் சர்டிபிகேட் கொடுத்து ஹாஸ்பிடலில் வேலை பார்த்த ஒருவன் சிக்கி கொள்ள எழில் அவனிடம் கோபப்பட்டு பேச இதை பார்த்து சுடர் அதிர்ச்சி அடைந்து, உண்மையை சொல்லாமல் மறைத்து விடுகிறாள்.

வருத்தத்தில் அஞ்சலி: இதையடுத்து வீட்டில் குழந்தைகள் அனைவருக்கும் செல்வி பால் கொண்டு வந்து கொடுக்க அஞ்சலி சுடர் எங்கே? அவங்க தான் பால் கொண்டு வருவாங்க என்று கேட்க, இந்த வீட்டில் செல்வி, சுடர் எல்லாரும் ஒன்னு தான். வேற இடத்துல வேலை கிடைச்சாலும் போய்டுவாங்க, கல்யாணம் ஆனாலும் போய்டுவாங்க என்று சொல்கிறாள் அபி. இதனால் சுடர் ரூமுக்கு வந்து அஞ்சலி வருத்தத்தோடு காத்திருக்க வீட்டுக்கு வந்த சுடர் அஞ்சலியிடம் உனக்கு என்னாச்சு என்று கேட்க உனக்கு வேற வேலை கிடைச்சாலோ, கல்யாணம் ஆனாலோ எங்களை விட்டுட்டு போய்டுவியா என்று கேட்க சுடர் இல்ல நான் போக மாட்டேன் என்று சொல்கிறாள். அஞ்சலி சத்தியம் பண்ணி சொல்லு என்று சத்தியம் வாங்குகிறாள்

போலீசை பார்த்து பயந்த சுடர்: கொஞ்ச நேரம் கழித்து பாஸ்போர்ட் ஏஜென்ட் ஆபிசில் இருந்து போன் பண்ணி போலீஸ் வெரிஃபிகேஷன் வருவாங்க, அது முடிந்ததும் பாஸ்போர்ட் கிடைத்து விடும் என்று சொல்ல சுடர் சந்தோசப்படுகிறாள், உடனே அஞ்சலிக்கு செய்த சத்தியம் நினைவுக்கு வர சோகமாகிறாள். மறுநாள் எழில் வீட்டிற்கு போலீஸ் வர சுடர் அவர்களை பார்த்து நடுங்க போலீஸ் உன் பேர் என்ன என்று கேட்க என்ன சொல்வது என்று யோசிக்கும் போது எழில் அங்கு வந்து உள்ள வாங்க என்று அழைத்து செல்கிறான்.

மனைவியின் கொலை வழக்கு: போலீசை அழைத்து சென்று தனது மனைவி கொலை கேஸ் பற்றி பேசுகிறான். தாலி தான் இன்னும் கிடைக்கல, அந்த தாலி யார் கிட்ட இருக்குனு கண்டு பிடிச்சா எல்லா உண்மையும் தெரிந்து விடும் என்று எழில் சொல்கிறான். மனோகரி சுடர் போலீசை பார்த்து பயப்படுவதை பார்த்து விட இவ கிட்ட ஏதோ விஷயம் இருக்கு அதை கண்டு பிடிக்கணும் என முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X