சுடரை விரட்டியடிக்க ஆதாரத்தை திரட்டிய மனோகரி.. நினைத்தேன் வந்தாய் சீரியல் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், சுடர், செல்வி எல்லாம் ஒன்னுதான் சுடருக்கு கல்யாணம் ஆகிவிட்டால், போய்விடுவாள் என்று சொல்ல, அஞ்சலி வருத்தத்தோடு இருக்கும் அஞ்சலி, சுடரிடம் உனக்கு வேற வேலை கிடைச்சாலோ, கல்யாணம் ஆனாலோ எங்களை விட்டுட்டு போய்டுவியா என்று கேட்க சுடர் இல்ல நான் போக மாட்டேன் என்று சொல்கிறாள். அஞ்சலி சத்தியம் பண்ணி சொல்லு என்று சத்தியம் வாங்குகிறாள்.

வீட்டிற்கு வரும் போலீசை பார்த்து சுடர் பயப்படுவதை பார்த்த மனோகரி, இவகிட்ட ஏதோ விஷயம் இருக்கு அதை கண்டு பிடிக்கணும் என முடிவெடுத்து, சுடர் ரூமில் இல்லாத போது, அவளுடைய ரூமில் ஆராய்ச்சி செய்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பதை பார்க்கலாம்.

Zee tamil television Ninaithen Vandhai serial April 9th today episode

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்க திடீரென கரண்ட் கட் ஆகி விடுகிறது. குழந்தைகள் பயப்படுவாங்க என்பதால் சுடர் மெழுகுவர்த்தி கொண்டுவர அதே நேரத்தில் எழிலும் மெழுகுவர்த்தி கொண்டு வர இருவரும் ஒரே மாதிரி யோசிப்பதை புரிந்து கொள்கின்றனர். குழந்தைகள் தூங்குவதால் அவர்களுக்கு சுடர் விசிறிவிட்டு கொண்டிருக்க திடீரென குழந்தைகள் எழில் மெழுகுவர்த்தியோடு நிற்பதை பார்த்து பயப்படுகின்றனர். சுடர் பயப்படாதீங்க கரண்ட் இல்ல அதனால நீங்க பயப்படக்கூடாதுன்னு அப்பா தான் மெழுகுவர்த்தி கொண்டு வந்திருக்காரு என சொல்கிறாள்.

ஏழிலை கடுப்பாக்கிய சுடர்: பிறகு கனகவல்லி கரண்ட் தான் இல்லையே எதுக்கு எல்லாரும் தனியா இருக்கீங்க, எல்லாரும் இங்க வாங்க ஒன்னா இருக்கலாம் என்று சொல்லி கூப்பிடுகிறாள். ராமையா இன்வெர்ட்டர் பிரச்சனை என்பதால் எல்லோரும் ஒரே இடத்தில் உட்காருகின்றனர். முதலில் அஞ்சலி பாட்டு பாடத் தொடங்க அப்படியே இந்து பாடலை பாடுவதை பார்த்து எல்லோரும் ஷாக் ஆகி திகைத்து நிற்கின்றனர். இதைப் பார்த்த சுடர் இப்படியே விட்டால் இந்துமதியுடன் ஞாபகம் அதிகமாக வந்து எல்லாரும் பீல் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க என்று அவள் பாட ஆரம்பிக்கிறாள். அதுவும் குடி போதையில் எழில் பாடிய காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன் பாடலை பாடுகிறாள்

மனோகரி போட்ட பிளான்: இதையடுத்து கரண்ட் வந்து விட அனைவரும் ரூமுக்கு செல்ல, சுடர் தனது அறையில் அனைத்து பொருட்களும் கலைந்து கிடப்பதை பார்த்து, யார் இப்படி செய்து இருப்பார் என்று யோசிக்கிறாள். இந்த வீட்டில் யாருக்கோ நம் மீது டவுட் இருக்கு என்பதை புரிந்து கொள்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X