சுடரின் உடலுக்குள் புகுந்த இந்துவின் ஆவி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், சுடர் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருக்க கோரக் வீட்டிற்குள் நுழைகிறான். அதன் பிறகு சுடர் நெற்றியில் கை வைத்து உன்ன நான் சும்மா விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்க குழந்தைகள் தூக்கத்திலிருந்து எழுந்து அலறுகின்றனர். இந்த சத்தம் கேட்டு எல்லோரும் எழுந்து ஓடி வருகின்றனர்.
அதன் பிறகு எழில் கோரக்கிடம் சண்டை போட்டு அவனை துரத்தி விடுகிறான். இதுகுறித்து, வீட்டிற்கு வந்த போலீசிடம் எழில், நைட் வீட்டுக்குள்ள ஒருத்தன் வந்துட்டான். அவன் யாரு என்பதையும் நீங்க தான் கண்டு பிடிக்கணும் என்று சொல்ல போலீஸ் கூடிய விரைவில் கண்டுபிடிப்பதாக சொல்கின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், தீபா, பேய் மேடம் எங்க இருக்கீங்க இரண்டு நாளாக நான் உங்களை தேடிக்கிட்டு இருக்கிறேன் எங்க போய்டீங்க என்று தனியாக பேசிக்கொண்டு இருக்க, அங்கு வரும் இந்து, சொல்லு தீபா என்று சொல்ல எங்க போய்ட்டீங்க என்று கேட்க, இந்து நான் இரண்டு நாளாக குழந்தைகள் கூட இருந்தேன் அதான் வரவில்லை என்று சொல்ல, அது எப்படி என்று கேட்க நான் சுடரின் உடம்புக்குள் சென்று, இரண்டு நாளாக பசங்கக்கூட இருந்துவிட்டு வந்தேன் என்று சொல்கிறாள்.
அந்த நேரம் அங்கு வரும் சுடர், இந்து அக்கா என்னை சுற்றி என்ன நடக்குதுனே தெரியவில்லை, நைட் ஏதோ சாமியார் வந்தாராம், அவரிடம் இருந்து நான் தான் அபியை காப்பாத்துனேன் என்று சொல்லுறாங்க எனக்கு ஒன்னுமே புரியவில்லை என்ற புலம்பிவிட்டு செல்கிறாள்.
சுடர் மீது இந்துவின் ஆவி: மறுபக்கம் வீட்டிற்கு வந்த அகோரியை தேடி மனோகரி வர, அவர் மனோகரி பற்றி எல்லா விஷயத்தையும் சொல்கிறார். அதாவது, அவள், எழில் மீது ஆசைப்படுவது, எழிலை கல்யாணம் செய்து கொள்வதற்காக இந்துவை தீர்த்து கட்டிய விஷயத்தை அந்த கோரக் சொன்னதும் மனோகரி எப்படி சாமி இதெல்லாம் என்று கேட்கிறாள். இதையடுத்து, எதுக்கு நேற்று வீட்டுக்கு வந்து சுடரை கொல்லப்பாத்தீங்க என்று கேட்க, நான் சுடரை கொல்ல வரல, அவள் உடம்பில் இருக்கும் இந்துவை அழிக்க வந்தேன் என்று சொன்னதும் மனோகரி, அதிர்ச்சி அடைந்து என்னது,சுடர் உடம்பில் ஆவியா என்று மனோகரி ஆச்சரியப்படுகிறாள்.
வசம் சிக்கிய எழில்: மறுபக்கம் வீட்டில், எழிலும் சுடரும் காரில் நேற்று இரவு நடந்த விஷயத்தை பற்றி பேசிக்கொண்டு வருகின்றனர். அப்போது, கொலைகாரனின் பைக் மீது எழிலின் கார் மோதிவிட, அவன் எழிலைப் பார்த்துவிட்டு ஓடுகிறான். இதையடுத்து, அந்த எழில் மற்றும் சுடர் அந்த கொலைகாரனை துரத்திக்கொண்டு ஓடுகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











