குழந்தைகளின் பாசத்தால் கலங்கிய ரவுடி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைததேன் வந்தாய் சீரியலில், வீட்டிற்கு வந்த அகோரியை தேடி மனோகரி வர, அவர் மனோகரி பற்றி எல்லா விஷயத்தையும் சொல்கிறார். அதாவது, அவள், எழில் மீது ஆசைப்படுவது, எழிலை கல்யாணம் செய்து கொள்வதற்கான இந்துவை தீட்டி கட்டிய விஷயத்தை அந்த கோரக் சொன்னதும் மனோகரி எப்படி சாமி இதெல்லாம் என்று கேட்கிறாள். இதையடுத்து, எதுக்கு நேந்து வீட்டுக்கு வந்து சுடரை கொல்லப்பாத்தீங்க என்று கேட்க, நான் சுடரை கொல்ல வரல, அவள் உடம்பில் இருக்கும் இந்துவை அழிக்க வந்தேன் என்று சொன்னதும் மனோகரி, அதிர்ச்சி அடைந்து என்னது,சுடர் உடம்பில் மனோகரி ஆவியா என்று ஆச்சரியப்படுகிறாள்.

மறுபக்கம் வீட்டில், எழிலும் சுடரும் காரில் நேற்று இரவு நடந்த விஷயத்தை பற்றி பேசிக்கொண்டு வருகின்றனர். அப்போது, இந்துவை கொலைகாரனின் பைக் மீது எழிலின் கார் மோதிவிட, அவன் எழிலைப் பார்த்துவிட்டு ஓடுகிறான். இதையடுத்து, அந்த எழில் மற்றும் சுடர் அந்த கொலைகாரனை துரத்திக்கொண்டு ஓடுகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Ninaithen Vandhai

நினைத்தேன் வந்தாய்: இன்றைய சீரியலில், அந்த ரௌடியை அடித்து என் மனைவி இந்துவை ஏன்டா கொலை பண்ணா என்று தும்சம் செய்கிறான். இதையடுத்து, ஒரு கல்லை எடுத்து அவன் தலையில் போட்டு கொலை செய்ய பார்க்க, அந்த நேரத்தில், அந்த இடத்திற்கு வரும், சுடர், என்ன சார் பண்ணீங்க, அவனை கொலை செய்துவிட்டு நீங்க ஜெயிலுக்கு போக போறீங்களா... குழந்தை கொஞ்சம் நினைச்சு பாருங்க சார். அவங்களுக்கு ஏற்கனவே அம்மா இல்லை இப்போ அப்பாவும் இல்லை என்றால் என்னாவது சார் என்று சுடர் சொல்ல, எழில் கல்லை கீழே போடுகிறான்.

பயத்தில் மனோகரி: இதையடுத்து அந்த இடத்திற்கு போலீஸ்வர அவர்கள், அந்த ரௌடியை கைது செய்து அழைத்து செல்கின்றனர். இதையடுத்து, இவர் வெறும் ரௌடிதான் இவனை கிட்ட யாரோ பணம் கொடுத்துத்தான் இந்துவை கொலை செய்ய சொல்லி இருக்கிறார்கள் அது யார் என்று தெரிந்தால் போதும் என்று சொல்கிறான். இதையடுத்து, போலீசார் நீங்க கவலைப்படாதீங்க சார் நான் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். மறுபக்கம் வீட்டில், எழில் கோவத்தோடு இந்த பக்கமும் அந்த பக்கமும் நடந்து கொண்டு இருக்க வீட்டிற்கு வரும் மனோகரி, என்ன வீடே அமைதியா இருக்கு என்று செல்வியிடம் கேட்கிறாள். அதுவா மா, இந்து அம்மாவை கொலை பண்ண திருடனை போலீசார் பிடித்துவிட்டனர் என்று சொல்கிறாள் இதைக்கேட்டு அதிர்ச்சி அடைகிறாள் மனோகரி.

ஆத்திரத்தில் எழில்: இந்த நேரத்தில் எழிலுக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்து போன்வருகிறது. அதில், ரௌவுடி என்ன செய்தாலும் உண்மையை சொல்லமாட்ரான் என்றதும் நான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகிறேன் நான் வந்து கேட்கிறேன் என்றதும், குழந்தைகளும் அப்பா நாங்களும் வருகிறோம், வந்து எங்க அம்மாவை ஏன் கொன்னே என்று கேட்கிறோம் என்று சொல்லி, அனைவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வருகின்றனர்.

கெஞ்சிய குழந்தைகள்: ஸ்டேஷனுக்கு வந்த குழந்தைகள் ஒவ்வொருத்தராக ரவுடியிடம் வந்த எதுக்கு என் அம்மாவை ஏன் கொன்னீங்க? நாங்க அம்மா இல்லாமல் எப்படி கஷ்டப்படுகிறோம் தெரியுமா, தயவு செய்து அம்மா கொல்ல சொன்னது யாருனு சொல்லுங்க என்று அன்பாக பேச ரவுடி மனம் மாறி உண்மையை சொல்ல முடிவெடுக்கிறான். அவன் உண்மையை சொல்ல வர மனோகரி ஏய் என்று அதட்டி கண்ணை காட்டி சொல்லாத என்று மிரட்டுகிறாள்.

அமைதியா இருங்க: இதனால் அந்த ரவுடி நீங்க என்ன தான் கேட்டாலும் நான் எதுவும் சொல்ல மாட்டேன் என்று சொல்ல எழில் கோபப்பட்டு அவன் கழுத்தை நெறிக்க போலீஸ் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து எழிலை சமாதானம் செய்கின்றனர். போலீஸ் உண்மையை நாங்க வர வைக்கிறோம் எழில் நீங்க அமைதியா வீட்டுக்கு போங்க என்று வாக்கு கொடுக்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X