சுடரின் அப்பாவை ஓங்கி அறையும் மனோகரி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், நேற்றைய எபிசோடில், எழில் திருமணத்திற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நேரம் பார்த்து, சுடரின் அப்பா வீட்டிற்கு வர ஏதோ நிகழ்ச்சி நடப்பதை பார்த்து அவர் கிளம்பி செல்கிறார், இதை பார்த்த மனோகரி செல்வியை அனுப்பி சுடரின் அப்பாவை வீட்டிற்குள் அழைத்து வருகிறாள்.
சுடரின் அப்பா உள்ளே வர மனோகரின் அப்பா, இவர் யார் என்று கேட்க, இதுதான் சுடரின் அப்பா என்று அறிமுகம் செய்து வைக்கிறாள்.அவரை வைத்து ஏதாவது செய்து சுடரை வீட்டை விட்டு துரத்த பிளான் போடுகிறாள். குழந்தைகள் சுடரின் அப்பாவை பார்த்ததும் தாத்தா என்று ஓடி வந்து கட்டி பிடித்து கொண்டு எங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க என்று கேட்க இவரும் சாக்லேட் வாங்கிட்டு வந்திருப்பதாக சொல்லி எடுத்து கொடுக்க மனோகரி வில்லத்தனத்துடன் பார்க்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கிறது என்று பார்ககலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், தாலி செய்ய வந்த ஆச்சாரி தங்கம் கொடுங்க என்று கேட்க கனகவல்லி தங்க காயினை கொண்டு வந்து கொடுக்க உங்க மூத்த மருமகளோட தாலியை கொடுங்க என்று கேட்கிறார். மூத்த மருமகளோட தாலி தொலைந்து விட்டதாக சொல்ல ஆச்சாரி காயினை வைத்து தாலியை செய்ய தொடங்குகிறார். அப்போது சுடர் அங்கு வர அவளது கழுத்தில் இருந்து தாலி தொங்க ஆச்சாரி அதை பார்த்து விடுவாரா என்ற பில்டப் எகிற பார்க்க முடியாமல் போகிறது. பின், அஞ்சலி சுடர் வைத்துக் கொண்டிருக்கும் குங்கும் டப்பாவை திறக்க அந்த குங்குமம் அவள் மீது பட்டு விட குங்குமத்தை துடைக்கும் போது தாலி தொங்குவதை பார்த்த சுடர் அதை எடுத்து மறைத்துக் கொள்கிறாள்.
இந்துவின் உணர்வு: அடுத்ததாக சுடரின் அப்பா குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இந்து இதுவரை பார்த்ததும் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசிக்கிறாள். சுடரின் அப்பாவுக்கும் யாரோ ஒரு நபர் இருப்பதைப் போல உணர்கிறார். திடீரென அஞ்சலி என்ன தாத்தா கையை நீட்டிக்கிட்டு யோசிச்சிட்டு இருக்கீங்க என்று கேட்க என் பொண்ணோட ஞாபகம் வந்துடுச்சு என்று இந்துவை பற்றி சொல்கிறார்.
அவமானப்படுத்தும் மனோகரியின் அப்பா: பிறகு குழந்தைகள் வாங்க தாத்தா சாப்பிடலாம் என்று அவரை கூட்டி வர அங்கு ஏற்கனவே சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் இது விஐபிகள் உட்கார்ந்து சாப்பிடும் இடம் என சத்தம் போடுகின்றனர். அதுமட்டுமில்லாமல், பொண்ணை இங்கே வேலைக்கு அனுப்பிவைத்து சொத்தை ஆட்டையப்போடு நினைக்கிறியா என்று கேட்க,ஆத்திரம் அடைந்த சுடரின் அப்பா, மனோகரி அப்பாவின் சட்டையை பிடித்து சண்டை போட, அந்த நேரம் இங்கு வரும் மனோகரி என் அப்பா மேல கை வைக்கிறாயா என்று , சுடரின் அப்பாவை கன்னத்தில் பளார் என்று அடிக்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











