நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனா.. கொந்தளித்த சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைததேன் வந்தாய் சீரியலில், வெள்ளிக்கிழமை எபிசோடில், எழில் வீட்டுக்கு வரும் சுடரின் அப்பா குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கும்போது அங்கு வந்த இந்து அவரை பார்த்ததும் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே என்று யோசிக்கிறாள்.
அதைத்தொடர்ந்து, குழந்தைகள் வாங்க தாத்தா சாப்பிடலாம் என்று அவரை கூப்பிட, இது விஐபிகள் உட்கார்ந்து சாப்பிடும் இடம் என்று மனோகரியின் அப்பா சத்தம் போடுகிறார். மேலும், பொண்ணை இங்கே வேலைக்கு அனுப்பிவைத்து சொத்தை ஆட்டையப்போட நினைக்கிறியா என்று கேட்க, ஆத்திரம் அடைந்த சுடரின் அப்பா, மனோகரி அப்பாவின் சட்டையை பிடிக்க, அப்போது அங்கு வரும் மனோகரி, என் அப்பா மேல கை வைக்கிறாயா என்று, சுடரின் அப்பாவை கன்னத்தில் பளார் என்று அடிக்கிறார். இதைத்தொடர்ந்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், இந்த சண்டையைத் தொடர்ந்து சுடரின் அப்பா வீட்டை விட்டு சென்றுவிடுகிறார். இது பற்றி குழந்தைகள் சுடரிடம் சொல்ல அவள், ஆத்திரத்தோடு அப்பாவைத் தேடி வெளியே வருகிறாள். ஏன் அப்பா வெளியில வந்தீங்க என்கிட்ட சொல்லி இருக்கலாமே என்று கேட்டுவிட்டு,வாங்கப்பா வீட்டுக்கு போகலாம் என்று கோவத்தோடு அழைத்து வருகிறாள்.
கடுப்பான சுடர்: அப்போது,வீட்டில் தாலி செய்யும் விழா நடந்து கொண்டு இருப்பதால், அனைவருடனும் மனோகரி ஜாலியாக பேசிக்கொண்டு இருக்க, ஆத்திரத்தோடு வரும் சுடர், ஏய் மனோகரி என்று கூப்பிட, திரும்பிய மனோகரி என்னடி ஏய்னு கூப்பிடுற என்று கேட்பதற்குள், மனோகரியின் கன்னத்தில் பளார் என்று அறைகிறாள். இதைப்பார்த்து, மனோகரியின் அப்பா ஓடிவர, என்ன திமிரு உனக்கு என் மகளை அடிக்கிற என்று கேட்க, நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனா என்று கேட்க அந்த இடமே களேபரமாகிறது.
இந்து ஆவி செய்த வேலை: இதைத்தொடர்ந்து, உள்ளே வரும் எழில், சுடரிடம் ஏன் மனோகரியை அடித்தாய் என்று கேட்டு திட்ட, மனோகரி, நாடகம் போட எழில் மனோகரியை திட்டுகிறான். இதைத்தொடர்ந்து குழந்தைகள் நடந்ததை சொல்ல, பின் மனோகரி நீ செய்தது தப்பு, அவரிடம் மன்னிப்பு கேள் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் மனோகரி மன்னிப்பு கேட்கிறாள். இதைத்தொடர்ந்து, சுடருக்கு விசா வந்துவிட அவள், ஊருக்கு கிளப்புகிறாள் இது பிடிக்காத இந்துவின் ஆவி, சுடரின் காரை விபத்தில் சிக்கவைக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











