சுடர் மீது காரை மோதிய இந்து..எழிலுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில்,
அதாவது, சுடர் கிளம்பும் போது அஞ்சலி ஓடி வந்து அவளை கட்டிப்பிடித்து கொள்கிறாள். பிறகு எல்லாரும் கிப்ட் கொடுத்தாங்க நீ என்ன கிப்ட் கொடுக்க போற என்று கேட்க அஞ்சலி முத்தம் கொடுத்து இது தான் என்னுடைய கிப்ட், என்னை விட்டு போயிடாத சுடர் என்று கட்டிப்பிடித்து அழுகிறாள்.

பிறகு எழில் சுடரை ஏர்போர்ட்டில் விடுவதற்காக கூட்டி வருகிறான், காரில் வரும் போது சுடர் கோவிலுக்கு போயிட்டு போகலாம் சார் என்று சொல்ல இருவரும் கோவிலுக்கு வருகின்றனர். இதைத்தொடர்ந்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
நினைத்தேன் வந்தாய்: இன்றைய சீரியலில், எழில் சுடர் இருவரும் கோவிலுக்குள் செல்ல,அங்கு இருக்கும் சாமியார் ஒருவர், சுடரை பார்த்ததும் நீ இந்த ஊரை விட்டு போக முடியாது. உன் இல்லற வாழ்க்கை இங்கே தான் இருக்கு, இந்த மண்ணை விட்டு நீ போகமுடியாது என்கிறார். மேலும், சாமியார் சுமங்கலி பவ என்று பூ போட்டு ஆசிர்வாதம் செய்ய எழில் அதிர்ச்சி அடைந்து,என்ன சொல்வது என்று தெரியாமல் இருக்கிறாள்.
விருப்பம் இல்லை: இதைத்தொடர்ந்து, சுடர் எழிலிடம் சார் ரொம்ப நன்றி, நான் வெளிநாடு போக வேண்டும் என்பது என் சின்னவயது ஆசை, அது நடக்காமலே போய்விடும் என்று பயந்துக்கிட்டே இருந்தேன். அப்போ உங்களால் வெளிநாடு போக போகிறேன் என்கிறாள் சுடர். அப்போது எழில், உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நீ வெளிநாடு போவதில் எனக்கு விருப்பமே இல்லை. ஆனால் வேறவழியில்லை. குழந்தைகளுக்கு உன்னை ரொம்ப பிடித்து இருக்கு, இந்து இறந்த பிறகு குழந்தைகள் சந்தோஷமாக உன்கூட இருக்காங்க, அதுமட்டுமில்லாமல் நானும், ரொம்ப மாறி இருக்கிறேன் என்கிறார்.
இப்படி இருவரும் பேசிக்கொண்டே நடந்து வந்துகொண்டு இருக்க,சுடர் வெளிநாடு போவதை எப்படியாவது தடுத்து நிறுத்தணும் காரை அவங்க கார் மேலே மோதி ஆக்சிடென்ட் பண்ணி சுடரை தடுத்து விடலாம் என்று சொல்ல தீபா பயத்தில் வர மறுக்கிறாள், ஒரு கட்டத்தில் இந்து அவளை சமாதனப்படுத்தி அழைத்து வருகிறாள். எழிலும் சுடரும் நடந்து வர, அப்போது தீபா காரை வேகமாக ஓட்டி வந்து சுடர் மீது மோதிவிட சுடர் மயங்கி விழுகிறாள். இதையடுத்து பதறிப்போன எழில், சுடரை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











