சுடர் கழுத்தில் இருக்கும் தாலி.. அடுத்து நடப்பது என்ன? நினைத்தேன் வந்தாய் சீரியல்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், ஏர்போர்ட்டுக்கு போகும் வழியில் எழில் மற்றும் சுடரும் கோவிலுக்கு போய்விட்டு, பேசிக்கொண்டு வந்து கொண்டு இருக்கின்றனர்.

சுடர் வெளிநாடு போவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிளான் போடும் இந்துவின் ஆவி, காரை அவங்க கார் மேலே மோதி ஆக்சிடென்ட் பண்ணி சுடரை தடுத்து விடலாம் என்று சொல்ல தீபா பயத்தில் வர மறுக்கிறாள், ஒரு கட்டத்தில் இந்து அவளை சமாதனப்படுத்தி அழைத்து வருகிறாள். எழிலும் சுடரும் நடந்து வர, அப்போது தீபா காரை வேகமாக ஓட்டி வந்து சுடர் மீது மோதிவிட சுடர் மயங்கி விழுகிறாள். இதைத் தொடர்ந்து இன்று நடக்கப்போவதை பார்க்கலாம்.

Zee tamil Ninaithen Vandhai

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், எழில், சுடரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு சுடருக்கு ஆக்சிடென்ட் ஆன விஷயத்தை வீட்டிற்கு தெரியப்படுத்துகிறான். விஷயம் தெரிந்து பதறிப்போன சுடரின் அப்பா மருத்துவமனைக்கு கிளம்பி வருகிறார். இதைத்தொடர்ந்து இந்துவின் ஆவியும் தீபாவும் மருத்துவமனைக்கு வர, அங்கே எழில் பதற்றத்தோடு கையில் கட்டுடன் இருப்பதைப்பார்த்த இந்துவின் ஆவி, அடியே தீபா நான் எழிக்கு ஒன்னும் ஆகக்கூடாதுனு தானே சென்னேன். பாரு அவர் கையில காயம் என்று புலம்ப, அட போங்க மேடம், ஒரு ஆக்சிடன்ட் பண்ண, நான் என்ன கஷ்டப்பட்டேன் என்று எனக்குத்தான்தெரியும் என்று என்கிறாள்.

கழுத்தில் இருந்த தாலி: இதைத்தொடர்ந்து, இந்து , தீபா இருவரும் சுடரை பார்க்க வர, அவள் மயக்கத்தில் இருக்கிறாள். பின், இந்து அவளை எழுப்ப வாங்க என்று எழுந்திருக்க முயற்சி செய்ய, சுடரின் கழுத்தில் இருந்த தாலியை இருவரும் பார்த்து விடுகின்றனர். உடனே இந்து, சுடர் உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டா என்று கேட்க, பதறிய சுடர் அந்த தாலியை மறைத்துக்கொண்டு, அட இல்லக்கா, இது எழில் சாரோட மனைவியின் தாலி, அன்னைக்கு பூஜை செய்யும் போது என் கழுத்தில் வந்து விழுந்துவிட்டது என்று அந்த விஷயத்தை சொல்கிறார்.

கடவுளின் முடிவு: இதைக்கேட்ட சுடர் சந்தோஷப்பட்டு விட்டு,பாத்தியா சுடர், உனக்கும் எழிலுக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்கு அதான், கடவுள் இப்படி செய்து இருக்கிறார் என்று சொல்ல, தீபாவும் ஆமா உண்மை தான் இது கடவுள் போட்ட முடிச்சி என்கிறாள். அந்த நேரம் பார்த்து நர்ஸ் உள்ளே வந்து, யார் கூட பேசிட்டு இருக்கீங்க என்று கேட்க, சுடர் இதோ இவங்கக்கூடத்தான் என்றது. நர்ஸ் இந்த பெண்ணுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று நினைத்துக்கொள்கிறார்.

மறுபக்கம், எழில், மனோகரி மற்றும் குழந்தைகளுடன் ஒரு துணி கடைக்கு செல்ல, மனோகரி அந்த ரவுடியை பார்த்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X