ஓடி ஓடி ஒளியும் மனோகரி... சுடர் மீது எழிலுக்கு வரும் காதல்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில் இதுவரை, அடிபட்டு மயக்கத்தில் இருக்கும் சுடரின் கழுத்தில் இருக்கும் தாலியை இந்து,தீபா பார்த்து விடுகின்றனர். உடனே இந்து, சுடர் உனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டதா என்று கேட்க, பதறிய சுடர் அந்த தாலியை மறைத்துக்கொண்டு.

இது எழில் சாரோட மனைவியின் தாலி, அன்னைக்கு பூஜை செய்யும் போது என் கழுத்தில் வந்து விழுந்துவிட்டது என்று அந்த விஷயத்தை சொல்கிறார். இதைக்கேட்ட, இந்து, சந்தோஷப்பட்டு விட்டு,பாத்தியா சுடர், உனக்கும் எழிலுக்கும் ஏதோ ஒரு பந்தம் இருக்கு அதான், கடவுள் இப்படி செய்து இருக்கிறார் என்று சொல்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Ninaithen Vandhai

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், எழில், சுடருக்கு அடிபட்டதை நினைத்து பீல் செய்து கொண்டிருக்கிறான். அப்போது மனோகரி, எழில் என கூப்பிட்டு உள்ளே வர எழில் வா சுடர் என்று கூப்பிட, அதிர்ச்சி அடைந்த மனோகரி என்னது சுடரா, என்று ஒரு மாதிரி பார்க்க, சுதாரித்துக்கொண்ட எழில், சுடருக்கு அடிப்பட்டதை நினைத்துக்கொண்டு இருந்ததால், அப்படி சொல்லி விட்டேன் என்று சொல்லி சமாளிக்கிறான். இதைத்தொடர்ந்து, மனோகரி நம்முடைய கல்யாணத்துக்கு இன்னும் ரெண்டு நாள் தான் இருக்கு.. துணி எடுக்க போகலாம் என்று சொல்லிக் கூப்பிடுகிறாள்.

வருத்தப்படும் சுடர்: உடனே சரி போகலாம் என்று, எழில் மற்றும் நான்கு குழந்தைகள், மனோகரி என எல்லோரும் கிளம்பி செல்கின்றனர். துணி கடைக்கு வெளியே மனோகரி அவளை கொல்ல வந்த ரவுடியை பார்த்து விட பயந்து போய் கடைக்குள் ஓடி ஓடி ஒளிகிறாள். குழந்தைகள் மனோகரி எதுக்கு இப்படி ஒளிகிறாள் என அவளையே பின் தொடர்கின்றனர். அடுத்ததாக சுடர் தனது அப்பாவுடன் இதே கடைக்கு வருகிறாள். வெளிநாடு போறதால் துணி எடுக்க கூட்டிட்டு வந்ததாக அவளது அப்பா சொல்கிறார். சுடர் எழிலை பார்த்து விட எழிலிடம் குழந்தைகளை நல்லா பார்த்துக்கோங்க, ஒரே முறை அஞ்சலி கிட்ட பேசிக் கொள்ளவா என்று கேட்க எழில் வேண்டாம் குழந்தைங்க பீல் பண்ணுவாங்க என்று நோ சொல்கிறான்.

பயத்தில் மனோகரி: பிறகு அஞ்சலி மிரர் வழியாக சுடரை பார்த்து அவளை தேடி வர, சுடர் ஒளிந்து கொள்கிறாள். அஞ்சலியை காணாமல் மற்ற குழந்தைகள் அவளை தேடி வந்து இங்கே என்ன பண்ற என்று கேட்க அஞ்சலி சுடரை பார்த்ததாக சொல்கிறாள். பிறகு சுடரெல்லாம் இங்க வர மாட்டா என்று சொல்லி அஞ்சலியை அழைத்துச் சென்று டிரஸ் எடுக்கின்றனர். அனைவரும் துணி எடுத்து முடிந்ததும் எழில் போகலாமா என்று கேட்க மனோகரி வெளியில் ரவுடி இருப்பதை நினைத்து பதறுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X