ரவுடியை நினைத்து அலறும் மனோகரி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழில் மற்றும் மனோகரி திருமணத்திற்கு துணி எடுத்துவிட்டு வெளியே வர, மனோகரி அவளை கொல்ல வந்த ரவுடி வெளியில் இருப்பதால், அவனை பார்த்து விட்டு பயந்து போய், மீண்டும் கடைக்குள் ஓடி ஓடி ஒளிகிறாள். குழந்தைகள் மனோகரி எதுக்கு இப்படி ஒளிகிறாய் என அவளையே பின் தொடர்கின்றனர்.

அடுத்ததாக சுடர் தனது அப்பாவுடன் இதே கடைக்கு வருகிறாள். வெளிநாடு போறதால் துணி எடுக்க கூட்டிட்டு வந்ததாக அவளது அப்பா சொல்கிறார். சுடர் எழிலை பார்த்து விட எழிலிடம் குழந்தைகளை நல்லா பார்த்துக்கோங்க, ஒரே முறை அஞ்சலி கிட்ட பேசிக் கொள்ளவா என்று கேட்க எழில் வேண்டாம் குழந்தைங்க பீல் பண்ணுவாங்க என்று நோ சொல்கிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்

zee tamil ninaithen vandhai

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், கடையில் துணி எல்லாம் எடுத்து முடித்த பிறகு கிளம்பலாமா மனோகரி வெளியே இருக்கும் ரவுடியை நினைத்து பயப்படுகிறாள். இதைத்தொடர்ந்து, மனோகரி காரில் கிளம்பி வர ரவுடியும் இதை பார்த்துவிட்டு, காரின் நம்பரை நோட் செய்து கொள்கிறான். பின், மனோகரி தன்னுடைய அப்பாவுக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல அவர் பயப்படாத மனோகரி, அந்த மதுரைக்கார ரவுடி இன்னும் சாகவில்லை உயிரோடுத்தான் இருக்கிறார் என்று சொல்ல மனோகரி பதறுகிறாள்.

என்ன அப்பா சொல்றீங்க, அவன் இன்னும் சாகவில்லையா என்று கேட்க, ஆமாம் மனோகரி அவன் உயிரோடு இருப்பதும்,உன்னை நோட்டம் இடுவதும் எனக்குத் தெரியும் என்று சொல்ல மனோகரி மேலும் அதிர்ச்சி அடைகிறாள். நீ இதைப்பத்தி எல்லாம் கவலைப்படாதே, அப்பா இருக்கேன், முதலில் உன் கல்யாணம் நல்லபடியா நடக்கட்டும், அதுக்கப்பறம் அந்த ரவுடியை பார்த்து கொள்ளலாம், அதுவரைக்கும் நீ வெளியில் வராதே என்று சொல்கிறார்.

இதைத்தொடர்ந்து, வீட்டில் நான்கு குழந்தைகளும் சாப்பிடாமல் சுடரை நினைத்து பீல் பண்ணுகின்றனர். எழில் சாப்பிட வரை அனைவரையும் கூப்பிட, குழந்தைகள் யாரும் சாப்பாடு வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என்று ராமையா சொல்ல, எழிலும் சாப்பிடாமல் சென்றுவிடுகிறான். பின் ராமையா குழந்தைகளிடம் சென்று நீங்க சாப்பிடாததால், அப்பாவும் சாப்பிடவில்லை என்று சொல்ல, குழந்தைகள் சுடர் இல்லாமல் எங்களுக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை என்கின்றனர். அதன் பின் அஞ்சலி, ராமையாவின் தோளில் சாய்ந்து கொண்டு, ஏன் சுடர் இந்த வீட்டை விட்டு போனா, என்று கேட்டு அழுகிறாள். இதைப்பார்த்து ராமையாவும் கண் கலங்குகிறார்.

எழில், மனோகரி: எழில் மற்றும் மனோகரி என இருவரும் காரில் வெளியே வரும் போது எழில் ஓரிடத்தில் காரை நிறுத்தி விட்டு மனோகரியை வெயிட் பண்ண சொல்லி விட்டு சுடரை சந்தித்து ஒரு கிஃப்ட்டை கொடுக்கிறான். எழில் சுடரை சந்தித்து பேசுவதை தூரத்தில் இருந்து பார்த்த மனோகரி அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X