மனோகரிக்கு வந்த மிரட்டல்.. நடக்க போவது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், மனோகரியும் அவளது அப்பாவும், இந்த சுடர் ஓவரா போய் கொண்டு இருக்குற, அவளையும், இந்த குழந்தைகளையும் சும்மா விடக்கூடாது.
எப்படி எழில் மனதை மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைத்தது போல, இந்த ஒட்டுமொத்த குடும்பத்தையும் வெளியில் அனுப்பிவிட்டு, எழிலும் நானும் இந்த வீட்டில் வாழ வேண்டும்பா, அதற்கு புதுசா பிளான் போட்டு, இந்த குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டும் என்று சொல்ல, அனைத்தையும், இந்துவின் ஆன்மாவுக்கு மனோகரின் உண்மை முகம் தெரிய மனோகரி, அவரின் அப்பா இரண்டு பேரையும் சும்மா வெளுவெளு என வெளுத்துவிடுகிறாள் இந்து. இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், இந்துவின் ஆவி இருவரையும் அடித்து ஓடவிட்டுவிட்டு கீழே இறங்கி வர, அங்கு குழந்தைகளும் சுடரும் சந்தோசமாக விளையாடி கொண்டிருக்கின்றனர். இதை பார்த்த இந்து இந்த சந்தோசம் எப்பவும் இப்படியே நிலைக்கணும். இந்த மனோகரி நினைக்கிறதை நடக்க விட கூடாது என்று முடிவெடுக்கிறாள். அந்த நேரம், அஞ்சலி கீழே விழுந்து விட சுடர் பதறி ஓடி போய் அவளை தூக்கி கவனித்து கொள்கிறாள்.
வருத்தப்படும் இந்துவின் ஆவி: இதைப்பார்த்த இந்துவின் ஆவி கலங்கிய கண்களுடன் தீபாவிடம் வந்து, இத்தனை நாளாக நான் யாரை நல்லவர்கள் என்று நினைத்தேனோ அவர்கள் என் குடும்பத்திற்கு துரோகம் செய்கிறான் என்று புலம்ப, அந்த நேரம் தீபா பேய் மேடம் வருத்தப்படாதீங்க எல்லாத்தையும் நாம பாத்துக்கலாம் உன்று இந்துவின் ஆவிக்கு சமாதானம் சொல்கிறார். அடுத்த நாள் காலையில் சுடரிடம் வந்து என் குழந்தை எப்படி இருக்கா என்று இந்து கேட்ட, என்னது உங்க குழந்தையா என்று கேட்க, நான் அப்படி கேட்கல, நேத்து குழந்தை கீழே விழுந்துட்டாளே அதை கேட்டதாக சொல்லி சமாளிக்கிறாள்.
மிரட்டும் ரூம் பாய்: மறுபக்கம், ரூம் பாய் மனோகரிக்கு போன் செய்து என்னுடைய போன் இப்பவே வேண்டும் என்று மிரட்டுகிறான். அதான் அவ்வளவு பணம் கொடுத்தேனே அதுல புது போன் வாங்க வேண்டியது தானே, அந்த போன் தான் வேணுமா என்று கேட்க, ஆமாம் அந்த போன் தான் வேண்டுமா என மனோகரி திமிர் காட்ட ரூம் பாய் வீட்டுக்கு வந்து உண்மையை சொல்லிடுவேன் என்று மிரட்ட, சரி சரி நானே அந்த போனை தேடி கொண்டு வருகிறேன் என்று சொல்லி விட்டு, போனை தேடி, சுடர் ரூமுக்கு செல்ல,அதை மறைந்திருந்து சுடர் மற்றும் ராமையா பார்த்துவிடுகின்றனர்.
அடுத்து நடப்பது என்ன: ராமையான அது அந்த ரூம் பாயோட போன், அதுல ஏதோ விஷயம் இருப்பதால், மனோகரி போதனை திருட்டு தனமாகஎடுத்து இருக்க. இதனால், மனோகரி பின் தொடர்ந்து சென்று, ரூம் பாயிடம் போன் கொடுப்பதை வீடியோ எடுத்துவிட்டால், இந்த கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று சுடர் மற்றும் ராமையா இருவரும், மனோகரியை பின் தொடர்ந்து செல்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











