மனோகரிக்கு வந்த மிரட்டல்.. நடக்க போவது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைததேன் வந்தாய் சீரியலில், ரூம் பாய் மனோகரிக்கு போன் செய்து என்னுடைய போன் இப்பவே வேண்டும், அதில் தான் பல விஷயம் இருக்கு என்று மிரட்ட, அந்த போனை தேடி, சுடர் ரூமுக்கு செல்கிறாள் மனோகரி. இதை மறைந்திருந்து சுடர் மற்றும் ராமையா பார்த்துவிடுகின்றனர்.
இதையடுத்து சுடர், ராமையாவிடம், அது அந்த ரூம் பையனோட போன், அதை ஏன் மனோகரி திருட வேண்டும். அதுல ஏதோ விஷயம் இருப்பதால், மனோகரி போனை திருட்டு தனமாக எடுத்து இருக்கா. இதனால், மனோகரியை பின் தொடர்ந்து சென்று, ரூம் பாயிடம் போனை கொடுப்பதை வீடியோ எடுத்துவிட்டால், இந்த கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என்று சுடர் மற்றும் ராமையா இருவரும், மனோகரியை பின் தொடர்ந்து செல்கின்றனர். இதையடுத்து இன்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், ரூம் பாயை சந்தித்து, மனோகரி போனை கொடுத்துவிட்டு, இனிமேல் எனக்கு போன் பண்ண அவ்வளவு தான், பணத்தை கொடுத்துத்தேன், போனையும் கொடுத்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு கிளப்ப, அது அனைத்தையும் சுடர் மற்றும் இராமையா மறைந்த இருந்து பார்த்துவிடுகின்றனர். ஓட்டலில் நடந்த பிரச்சனைக்கு காரணம் மனோகரி தான் என்கிற உண்மை தெரியவருகிறது. திருமணத்திற்காகத்தான் மனோகரி போட்ட திட்டம் என இருவரும் தெரிந்து கொள்கின்றனர்.
வசமாக சிக்கிய ரூம் பாய்: பிறகு ரூம் பாய் போனை வாங்கிக் கொண்டு செல்லும் போது, சுடரும் ராமையாவும் அவனை துரத்திச் சென்று மடக்கிப் பிடிக்கின்றனர். பிறகு ஒரு இடத்தில் கட்டி வைத்து எழிலுக்கு போன் செய்து ஹோட்டலில் நடந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருந்தவனை பிடித்து வைத்திருப்பதாகவும் உடனே கிளம்பி வரச் சொல்லி பேசுகிறாள். எழில் வீட்டிலிருந்து வேக வேகமாக கிளம்ப எதிரே வந்த மனோகரி எங்க போற எழில், என்று கேட்க ஹோட்டலில் நடந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமானவனை சுடர் புடிச்சிட்டா என்று சொன்னதும் மனோகரி அதிர்ச்சி அடைகிறாள்.
மனோகரி போட்ட பிளான்: உடனே தனது அப்பாவுக்கு போன் செய்து விஷயத்தை சொல்லி எப்படியாவது அந்த ரூம் பாயை தப்பிக்க வையுங்க என்று சொல்கிறாள். அதன் பிறகு மனோகரி எழிலுடன் கிளம்பி வர, ரௌடிகளை ஏற்பாடு செய்த மனோகரியின் அப்பா ரவுடிகளுடன் காரில் அந்த ரூம் பாய் இருக்கும் இடத்திற்கு சென்று கொண்டிருக்க, வழியில் மனோகரிக்கு போன் செய்கிறார். ஆனால், மனோகரி எழிலுடன் காரில் அந்த இடத்திற்கு வந்து கொண்டு இருப்பதால் பேச முடியாமல் போனை கட் செய்து கொண்டே இருக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











