துப்பாக்கி பட பாணியில் ரூம் பாயை பீரோவில் கட்டிப்போட்ட இந்து.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைததேன் வந்தாய் சீரியலில், மனோகரி, ரூம் பாயிடம் போனை கொடுத்த நிலையில், சுடரும் ராமையாவும் அவனை துரத்திச் சென்று மடக்கிப் பிடித்து, ஒரு இடத்தில் கட்டி வைத்து எழிலுக்கு போன் செய்து ஹோட்டலில் நடந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமாக இருந்தவனை பிடித்துவிட்டதாக கூறுகின்றனர்.

இதையடுத்து, எழில் வீட்டிலிருந்து எதிரே வந்த மனோகரி எங்க போற எழில், என்று கேட்க, ஹோட்டலில் நடந்த பிரச்சனைக்கு முக்கிய காரணமானவனை சுடர் புடிச்சிட்டா என்று சொன்னதும் மனோகரி அதிர்ச்சி அடைகிறாள். அப்பாவுக்கு போன் செய்து, ரௌடிகளை அங்கு அனுப்பி ரூம் பாயை காப்பாற்ற சொல்லுகிறாள். இதையடுத்து இன்று நடப்பதை பார்க்கலாம்.

Zee tamil Ninaithen Vandhai

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், எழில் சுடர் சொன்ன இடத்திற்கு வர சுடர் வாங்க சார் இங்க தான் இருக்கான் என்று சொல்லி அவனை அழைத்துச் சென்று ரூம் கதவை திறக்க உள்ளே யாரும் இல்லை. இதனால் எழில், சுடர் மீது கோபப்படுகிறான். உன்னால எவ்வளவு முக்கியமான வேலை எல்லாம் விட்டுட்டு வந்தேன் தெரியுமா என்று கோபத்தில் கத்துகிறான்.

ரூம் பாய் காணாமல் போனதை நினைத்து மனோகரி நிம்மதி அடைகிறாள். அதன் பிறகு அவளது அப்பாவுக்கு போன் போட்டு நீங்கதான் ரூம் பாயை தப்பிக்க வச்சீங்களா என்று கேட்க அவர் நான் எதுவும் பண்ணல.. எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல மனோகரி குழப்பம் அடைகிறாள். இருந்தாலும் தலை தப்பித்தது சந்தோஷம் என நினைத்து கொள்கிறாள்.

டென்ஷனான சுடர்: அடுத்ததாக தீபா மற்றும் இந்து என இருவரும் பேசிக் கொண்டிருக்க இங்கு வரும் சுடர் எல்லாமே போச்சு.. எப்படி தப்பிச்சான் அவன் என்று அந்த ரூம் பாய் மீது இருக்கும் கோபத்தில் அங்கிருக்கும் பீரோவில் குத்த பீரோவுக்குள் ரூம் பாய் கட்டி போடப்பட்டு இருப்பது காட்டப்படுகிறது. சுடர் கோபத்தில் இருப்பதை பார்த்த தீபா, சுடர் என்ன பண்ணிட்டு இருக்க, அது பழைய பீரோ நீ குத்துற குத்துக்கு எல்லாம் அது தாங்காது என்று அவளை தடுத்து நிறுத்துகிறாள். அதன் பிறகு பிளாஷ்கட்டில் இந்து மற்றும் தீபா என இருவரும் சேர்ந்து ரூம் பாயை கடத்தி கொண்டு வந்து வீட்டில் பீரோவிற்குள் அடைத்து வைத்துள்ளனர்.

வருத்தப்படும் குழந்தைகள்: இதையடுத்து குழந்தைகள், இரவில் தூங்காமல் அம்மா இருந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கு இருக்கும், அம்மா இல்லாம நாம எவ்வளவு கஷ்டப்படுகிறோம் பாத்தியா என்று பேசிக்கொண்டு இருக்க, அங்கே இந்துவும் குழந்தைகள் ஞாபகமாக இருப்பதாக சொல்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X