இந்துவை அழிக்க வந்த கோரக்.. நடு இரவில் நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், ரௌடியால் பயந்து போன குழந்தைகள் தூங்காமல் இருக்க,அப்போது சுடர் அங்கு வர குழந்தைகள் அம்மாவிற்கு ஆன மாதிரியே எங்களுக்கும் ஆகிடுமோனு பயமா இருக்கு, நீ எங்களை விட்டு போகாமல் இருப்பியா? போக மாட்டேன்னு சத்தியம் பண்ணு என்று கேட்க சுடரும் சத்தியம் செய்து கொடுக்கிறாள். சுடர் மற்றும் குழந்தைகள் என ஐந்து பேரும் சந்தோசமாக இருக்கின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், சுடர் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருக்க கோரக் வீட்டிற்குள் நுழைகிறான். அதன் பிறகு சுடர் நெற்றியில் கை வைத்து உன்ன நான் சும்மா விடமாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருக்க குழந்தைகள் தூக்கத்திலிருந்து எழுந்து அலற சத்தம் கேட்டு எல்லோரும் எழுந்து ஓடி வருகின்றனர். அதன் பிறகு எழில் கோரக்கிடம் சண்டை போட்டு அவனை துரத்தி விடுகிறான். இதைப்பார்த்து பயந்து போன குழந்தைகள், எங்களுக்கு பயமா இருக்கு நீங்களும் எங்க கூட வந்து தூங்குங்க என்று சொன்னதும் எழில் குழந்தைகளுடன் தூங்க செல்கிறான்.

Zee tamil Ninaithen Vandhai

வீட்டிற்கு வரும் போலீஸ்: காலையில் வீட்டிற்கு வரும் போலீஸ், அபியிடம் நடந்தது என்ன என்று விசாரிக்க அவள், அம்மாவை கொன்றவர்களை பார்த்தேன் அவர்களிடம் சண்டை போட்டேன் அவர்கள் என்னை காரில் ஏற்றினார்கள் சுடர் தான் என்னை காப்பாற்றினாள் என்று சொல்கிறாள். அதைத்தொடர்ந்து எழில் நைட் கூட வீட்டுக்குள்ள ஒருத்தன் வந்துட்டேன் அவன் யாரு என்பதையும் நீங்க தான் கண்டு பிடிக்கணும் என்று சொல்ல போலீஸ் கூடிய விரைவில் கண்டுபிடிப்பதாக சொல்கின்றனர். மேலும் சுடரிடம் அந்த ரவுடிகளையோ அல்லது காரையோ எங்கேயாவது பார்த்தால் தகவல் கொடுக்குமாறு சொல்லிவிட்டு கிளம்புகின்றனர்.

விஷயம் கை மீறிப்போவதால், என்ன செய்வது என்று தெரியாமல் மனோகரி அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள். ‌

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X