சுடரை வெச்சு செய்யும் குழந்தைகள்.. காப்பாற்றும் ராமையா.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இதில் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாகவும், கீர்த்தனாபொட்வால், ஜாஸ்மின்.கனிஷ்கா, கவுஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் வெள்ளிக்கிழமை எபிசோடில் காபி எடுத்து வந்த சுடர் எழிலை பார்த்து அதிர்ச்சியடைந்து ஓடி ஒளிந்துவிடுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு: நினைத்தேன் வந்தாய் சீரியலின் இன்றைய எபிசோடில், எழிலைப்பார்த்துவிட்டு சுடர் ஓடி ஒளிவதை பார்த்த ராமையா, ஏன் என்னாச்சு என்று கேட்க, சுடர் எழிலை பாட்டிலால் தலையில் அடித்த கதையை சொல்கிறாள். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமையா. இப்பவே போய் ஐயா கிட்ட சொல்லி உன்னை என்ன செய்கிறேன் பார் என்று வேகமாக புறப்பட, ராமையா தடுத்து நிறுத்தும் எழில், தன்னுடைய கதையை சொல்ல அதைக் கேட்டு ராமையாவின் மனம் மாறுகிறது.
நான் பாத்துக்கிறேன்: சரி உனக்காக நான் ஐயா கிட்ட பேசுறேன் அவர் கண்டிப்பா வேலையிலிருந்து அனுப்ப மாட்டாரு. நீ போய் ஒழுங்கா வேலைய பாரு என்று அனுப்பி வைக்கிறார். அடுத்ததாக சுடர் வந்து குழந்தைகளை எழுப்ப அவர்கள் கோபப்படுகின்றனர். ஆளாளுக்கு சுடரை போட்டு கலாய்த்து கிண்டல் அடிக்கின்றனர். சுடர் அவர்களிடம் கெஞ்சி கூத்தாடி குளிக்க அழைத்து சென்று குளிக்க வைக்கிறாள். அதன் பிறகு கனகவல்லி அனைவரையும் சாப்பிட கூப்பிட, சுடர் குழந்தைகளை கூப்பிட, குழந்தைகள் ஓவரா ஆக்டிங் பண்ணாத எங்களுக்கும் காது நல்லா கேட்கும் என்று பதிலடி கொடுக்கின்றனர்.

அடுத்து என்னவாகும்: அடுத்ததாக அஞ்சலி என்ன ஹாப்பியா இருக்க மாதிரி இருக்கு என்று கேட்க சுடர் இல்ல நான் டல்லா தான் இருக்கேன் என்று சொல்ல எங்களுக்கும் அதான் வேணும். தினமும் இப்படி இருந்தா தான் உன் மூஞ்சி நல்லா இருக்கு என்கிறாள். பிறகு கனகவல்லி ராமையாவிடம் அந்த பொண்ணையும் சாப்பிட கூப்பிடுங்க, எழிலுக்கும் அறிமுகப்படுத்தி வைக்கணும் என்று சொல்ல சுடர் அதிர்ச்சி அடைந்து ஒளிகிறாள். ராமையா எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்று வர மறுக்கும் சுடரை வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது தெரிந்து கொள்ள நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











