குழந்தைகளால் எழிலிடம் வசமாக சிக்கிய சுடர்..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இதில் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாகவும், கீர்த்தனாபொட்வால், ஜாஸ்மின்.கனிஷ்கா, கவுஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் எழிலைப் பார்த்துவிட்டு சுடர் ஓடி ஒளிவதை பார்த்த ராமையா, ஏன் என்னாச்சு என்று கேட்க, சுடர் எழிலை பாட்டிலால் தலையில் அடித்த கதையை சொல்கிறாள். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ராமையா. இப்பவே போய் ஐயா கிட்ட சொல்லி உன்னை என்ன செய்கிறேன் பார் என்று வேகமாக புறப்பட, ராமையா தடுத்து நிறுத்தும் எழில், தன்னுடைய கதையை சொல்ல அதைக் கேட்டு ராமையாவின் மனம் மாறுகிறது.

சரி உனக்காக நான் ஐயா கிட்ட பேசுறேன் அவர் கண்டிப்பா வேலையிலிருந்து அனுப்ப மாட்டாரு. நீ போய் ஒழுங்கா வேலைய பாரு என்று அனுப்பி வைக்கிறார். அடுத்ததாக சுடர் வந்து குழந்தைகளை எழுப்ப அவர்கள் கோபப்படுகின்றனர். ஆளாளுக்கு சுடரை போட்டு கலாய்த்து கிண்டல் அடிக்கின்றனர். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
பேய் வேஷம் போட்ட குழந்தைகள்: இதனைத் தொடர்ந்து எழிலிடமிருந்து தப்பித்த சுடர் குழந்தைகளை ஸ்கூலுக்கு அழைத்து சென்று, எழிலின் பார்வையில் இருந்து தப்பிக்கிறாள். இதையடுத்து, பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு வந்த குழந்தைகளை படிக்க சொல்கிறாள் சுடர். யாரும் சரியா படிக்கலனா டாடி கிட்ட சொல்லிடுவேன் என்று மிரட்டி படிக்க வைக்கிறாள். இதனால் கடுப்பான குழந்தைகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சுடரை வெளியே அனுப்ப திட்டம் போடுகின்றனர். இதற்காக நான்கு பேரும் பல திட்டங்களை போடுகின்றனர். இதில், அபி ,பேய்க்கு பயப்படாதவங்க யாருமே இருக்க மாட்டாங்க என்று சுடரை பயமுறுத்த திட்டம் போடுகின்றனர்.

பயந்து எழிலை கட்டிப்பிடித்த சுடர்: இதையடுத்து, லைட்டை அனைத்து விட்டு அனைவரும் பேய் வேஷம் போட்டுக்கொண்டு, சுடரின் கழுத்தை நெரித்ததும் பயந்து போன சுடர் வெளியே ஓடி வர எழிலும் சத்தம் கேட்டு வெளியே வருகிறார். சுடர் பேய்க்கு பயந்து எழிலை கட்டிப்பிடித்துக் கொள்கிறாள். எழியார் யார் விடு விடு என்று கத்தியும் சுடர் பயத்தில் எழிலை பின்புறுத்தில் இருந்து கட்டிபிடித்தபடி இருக்கிறாள். இவர்களின் சத்தம் கேட்டு வந்த கனகவள்ளி, சுடர் எழிலை கட்டிபிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஒரு கத்து கத்துகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை தெரிந்து கொள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியை காணத்தவறாதீர்கள்


Click it and Unblock the Notifications











