மிஸ்டர் பார்த்து பேசுங்க.. எழிலிடம் சவால் விட்ட சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இதில் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாகவும், கீர்த்தனாபொட்வால், ஜாஸ்மின்.கனிஷ்கா, கவுஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலின் கேர் டேக்கராக இருக்கும் சுடரை வீட்டை விட்டு வெளியே அனுப்ப திட்டம் போடும் குழந்தைகள், லைட்டை அணைத்து விட்டு பேய் வேஷம் போட்டுக்கொண்டு, சுடரின் கழுத்தை நெரித்து பயமுறுத்துகின்றனர். இதனால் பயந்து போன சுடர் கத்திக்கொண்டே வெளியே ஓடி வருகிறாள். சத்தம் கேட்டு வெளியே எழில் வர, சுடர் பேய்க்கு பயந்து எழிலை கட்டிப்பிடித்துக் கொள்கிறாள். எழில், யார் விடு விடு என்று கத்தியும் சுடர் பயத்தில் எழிலை பின்புறுத்தில் இருந்து கட்டிபிடித்தபடி இருக்கிறாள். இவர்களின் சத்தம் கேட்டு வந்த கனகவள்ளி, சுடர் எழிலை கட்டிபிடித்துக்கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள்.இதையடுத்து இன்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோடு: நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில், கேர் டேக்கராக வந்திருக்கும் பெண், தன்னை பாட்டிலால் தலையில் அடித்த பெண் சுடர் என்பதை தெரிந்து கொண்டு அதிர்ச்சி அடைகிறான். உன்கிட்ட புள்ளைகள் வளர்ந்தா ரவுடியாக தான் வளருவாங்க என்று திட்டி வெளியே போக சொல்ல சுடர் வெளியே போனால் எனக்கு என்ன வேலையா கிடைக்காது என்று கூறிவிட்டு, ஹாஸ்டல் தோழிக்கு போன் செய்ய அவள் உன்னால் நான் நடுத்தெருவுக்கு வந்துட்டேன் என்று திட்டி போனை வைத்து விடுகிறாள்.

ஒரு மாசம் டைம் கொடுங்க: இதனால் சுடர் எப்படியாவது இங்க தான் இருந்தாகணும் என்று முடிவெடுத்து எழிலிடம் வந்து எப்படி நீங்க என்னை பார்த்து ரவுடின்னு சொல்லலாம், என்னை நீங்க அவமானப்படுத்திட்டீங்க, இந்த அவமானத்தோடு என்னால வெளியில போகமுடியாது. எனக்கு ஒரே ஒரு மாசம் டைம் கொடுங்க, உங்க பசங்களை நான் மாத்தி காட்டுறேன் என்று சவால்விடுகிறாள் சுடர். முதலில் யோசிக்கும் எழில் பிறகு சவாலுக்கு ஓகே சொல்லி விடுகிறான். இதை பார்த்துக்கொண்டு இருக்கு குழந்தைகள் அப்பாவையே இந்த அதட்டு அதட்டுறா, இவ நம்மள அடிக்க கூட செய்வா போலயே. இவ நமக்கு வேண்டவே வேண்டாம் எப்படியாவது இவளை வெளியே துரத்தணும் என்று பிளான் போடுகிறார்கள். செல்வி மனோகரிக்கு போன் செய்து அந்த சுடர் இந்துமதி போலவே பேசுறா என்று சொல்கிறாள். பிறகு குழந்தைகள் இது எல்லாத்துக்கும் காரணம் கவின் தான் என்று திட்டுகின்றனர். சுடரை எப்படியாவது வீட்டை விட்டு அனுப்பிடனும், அதுவரைக்கும் அவ கிட்ட கொஞ்சம் பார்த்து தான் நடந்துக்கணும் என முடிவெடுக்கின்றனர்.
சுடரை டார்ச்சர் செய்யும் குழந்தைகள்: இதனை தொடர்ந்து எழில் ஹாஸ்பிடல் வர அவனுடன் பார்ட்னர்ஷிப் வைத்து கொள்ள வேண்டும் என்று ஒருவர் தொந்தரவு செய்ய எழில் முடியாது என்று துரத்தி விடுகிறான், வீட்டில் குழந்தைகள் சுடரை டார்ச்சர் செய்ய அடுத்த பிளான்களை தீட்டுகின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பதை தெரிந்து கொள்ள ஜீ தமிழ் தொலைக்காட்சியை பாருங்கள்.


Click it and Unblock the Notifications











