சுடரை தூக்கி செல்லும் எழில்... சந்தேகப்படும் மனோகரி..நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இதில் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாகவும், கீர்த்தனாபொட்வால், ஜாஸ்மின்.கனிஷ்கா, கவுஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடித்து வருகின்றனர்.
விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், சுடர் யார் என்பதை தெரிந்து கொண்ட எழில் உன்கிட்ட புள்ளைகள் வளர்ந்தா ரவுடியாக தான் வளருவாங்க என்று திட்டி அவளை வெளியே போக சொல்கிறான். இதனால், கடுப்பாகும் சுடர், என்னைப்பார்த்து எப்படி ரவுடின்னு சொல்லலாம், என்னை நீங்க அவமானப்படுத்திட்டீங்க, இந்த அவமானத்தோடு என்னால வெளியில போகமுடியாது.

நினைத்தேன் வந்தாய்: எனக்கு ஒரே ஒரு மாசம் டைம் கொடுங்க, உங்க பசங்களை நான் மாத்தி காட்டுறேன் என்று சவால் விடுகிறாள். முதலில் யோசிக்கும் எழில் பிறகு சவாலுக்கு ஓகே சொல்லி விடுகிறான். இதை பார்த்துக்கொண்டு இருந்த குழந்தைகள் அப்பாவையே இந்த அதட்டு அதட்டுறா, இவ நம்மள அடிக்க கூட செய்வா போலயே. இவ நமக்கு வேண்டவே வேண்டாம் எப்படியாவது இவளை வெளியே துரத்தணும் என்று பிளான் போடுகிறார்கள். இதையடுத்து இன்று என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
காய்ச்சலில் சுடர்: இதையடுத்து இன்றைய எபிசோடில், காவியாவை அனுப்பி சுடரை அழைத்து வர சொல்ல அவளை அழைத்து வரும் போது, அவள் மீது மாவை கொட்ட வைக்கின்றனர். அதோடு நிறுத்தாமல் அஞ்சலி டவலை கொண்டு வந்து கொடுக்க அதில் அடுப்பு கரி தடவி இருக்க சுடர் முகம் முழுவதும் கருப்பாகிறது. உடல் முழுவதும் மாவாக இருப்பதால் கண்ணை திறக்க முடியாமல் பாத்ரூமை தேடிச் செல்லும் போது, கவின் கீழே ஷாம்புவை கொட்டி அவளை வழுக்கி விழ வைக்கிறான். பாத்ரூமில் தண்ணீர் இல்லாமல் பக்கெட்டில் கை வைக்க அது ஐஸ் கட்டி தண்ணியாக இருக்கிறது.
மயங்கி விழுந்த சுடர்: அந்த தண்ணீரில் குளித்ததால், சுடருக்கு காய்ச்சல் வந்து விடுகிறது. மறுபக்கம் மனோகரி டின்னருக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து விட்டு காத்துக்கொண்டு இருக்கிறாள். இந்த நேரம் பார்த்து சுடர் மயங்கி விழுந்து விட எழில் அவளை தூக்கிக்கொண்டு ரூமுக்கு செல்கிறான். அவளுக்கு சிகிச்சை கொடுத்து பக்கத்தில் இருந்தே பார்த்துக் கொள்கிறான். மறுபக்கம் மனோகரி காத்திருந்து காத்திருந்து கடுப்பாகி வீட்டுக்கு வர எழில் சுடரை தூக்கிக் கொண்டு செல்வதை பார்த்து பயங்கர அதிர்ச்சி அடைகிறார். சுடர் எழிலை வளைத்து போட முயற்சி செய்வதாக தவறாக புரிந்து கொள்கிறாள்.
காபி சூப்பரா இருக்கு: அதைத் தொடர்ந்து மறுநாள் சுடருக்கு உடல்நிலை சரியானதை அடுத்து, சீக்கிரம் எழுந்து காபி போட்டு தருகிறான். அதை குடித்த எழில், அம்மா இன்னைக்கு காபி வித்தியாசமா ரொம்ப நல்லா இருக்கு என்று சொல்கிறான். அப்போது கனகவல்லி, இன்னைக்கு நான் காபி போடல சுடர் தான் காபி போட்டா என்று சொல்கிறாள்.
அடுத்து சுடர் என்ற பெயரில் வீட்டிற்கு போஸ்ட் வந்திருப்பதாக போஸ்ட்மேன் வந்து சொல்ல பதறிப் போகும் சுடர் இங்கே தமிழ்னு தான் இருக்காங்க சுடர்னு யாரும் இல்ல என்று சமாளிக்கிறாள். இதையடுத்து, அனைவரும், உள்ளே வந்ததும் சுவர் ஏறி குதித்துச் சென்று போஸ்ட் மேனிடம் சென்று, நான் தான் சுடர் அந்த லெட்டரை என்னிடம் கொடுங்க என்று கேட்க அவர் என்னமா விளையாடுறியா? இங்க இருந்து போறியா இல்ல, போலீசை கூப்பிடவா என்று ஷாக் கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பதை பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











