காதலோடு காத்திருக்கும் மனோகரி..வஞ்சத்தில் என்ன முடிவு எடுப்பாள்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடு

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய். இதில் கணேஷ் வெங்கட்ராம் ஹீரோவாகவும், கீர்த்தனாபொட்வால், ஜாஸ்மின்.கனிஷ்கா, கவுஷிக், யுக்தா, ஷாபா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

சுடரை வெளியில் அனுப்ப திட்டம் போடும் குழந்தைகள் அவளை வெளியில் அனுப்ப பல திட்டங்களை போடுகின்றனர். மேலும், அவள் மீது மாவை கொட்டி அவள் முகத்தில்,கறியை பூசி விடுகின்றனர். உடல் முழுவதும் மாவாக இருந்ததால், கண்ணை திறக்க முடியாமல் பாத்ரூமை தேடிச் செல்லும் போது, கவின் கீழே ஷாம்புவை கொட்டி அவளை வழுக்கி விழ வைக்கிறான். பாத்ரூமில் தண்ணீர் இல்லாமல் பக்கெட்டில் கை வைக்க அது ஐஸ் கட்டி தண்ணியாக இருக்கிறது.

Zee tamil television Ninaithen Vandhai serial February 23rd episode

நினைத்தேன் வந்தாய்: ஐஸ் தண்ணீரில் குளித்ததால், சுடருக்கு காய்ச்சல் வந்து விடுகிறது. இதனால், சுடர் மயங்கி விழுந்து விட எழில் அவளை தூக்கிக்கொண்டு ரூமுக்கு செல்கிறான். அவளுக்கு சிகிச்சை கொடுத்து பக்கத்தில் இருந்தே பார்த்துக் கொள்கிறான். மறுபக்கம் எழியிடம் காதலை சொல்ல பல கனவுகளுடன் மனோகரி, டின்னரில் காத்துக்கொண்டு இருக்கிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil television Ninaithen Vandhai serial February 23rd episode

கடுப்பான எழில்: இன்றைய எபிசோடில், மனோகரி எழிலுக்கு பல முறை போன் செய்தும் அவர் எடுக்காததால், கடுப்பாகி வீட்டுக்கு வருகிறாள். இந்த நேரம் பார்த்து சுடர் மயங்கி விழுந்து விட எழில் அவளை தூக்கிக்கொண்டு ரூமுக்கு செல்கிறான். அவளுக்கு சிகிச்சை கொடுத்து பக்கத்தில் இருந்தே பார்த்துக் கொள்கிறான். இதைப்பார்த்த அதிர்ச்சி அடைந்த மனோகரி நான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் நீ இங்க இவக்கூட கூத்துஅடிக்கிறியா என்று மனதிற்குள் கேட்கிறாள்.

Zee tamil television Ninaithen Vandhai serial February 23rd episode

கனகவல்லி சுடர் போட்ட காபி: அதைத் தொடர்ந்து மறுநாள் சுடர் முழுவதும் குணமாகி சீக்கிரம் எழுந்து காபி போட்டு வைத்து விட அதை குடித்த அவன் காபி வித்தியாசமா ரொம்ப நல்லா இருக்கு என்று அம்மாவிடம் சொல்ல கனகவல்லி சுடர் போட்ட காபி தான் என்று சொல்கிறாள். அடுத்து இனிமே உடம்பு சரி இல்லையென்றால் முதலில் சொல் என அட்வைஸ் செய்கிறான்.

Zee tamil television Ninaithen Vandhai serial February 23rd episode

அடுத்து சுடர் என்ற பெயரில் போஸ்ட் வந்திருப்பதாக போஸ்ட்மேன் வந்து சொல்ல பதறிப் போகும் சுடர் இங்கே தமிழ்னு தான் இருக்காங்க சுடர்னு யாரும் இல்ல என்று சமாளிக்கிறாள். எல்லோரும் உள்ளே வந்ததும் சுவர் ஏறி குதித்துச் சென்று போஸ்ட் மேனிடம் சென்று நான் தான் சுடர் அந்த லெட்டர் குடுங்க என்று கேட்க அவர் என்னமா விளையாடுறியா? இங்க இருந்து போறியா இல்ல போலீசை கூப்பிடவா என்று ஷாக் கொடுக்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்துஅறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X