மனைவியின் மரணத்திற்கு பழிவாங்க துடிக்கும் எழில்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், திருமண பத்திரிக்கையில் எழில், சுடரின் போட்டோ இருப்பதை பார்த்து டென்ஷனான மனோகரி, சுடரை கூப்பிட்டு எப்படி பத்திரிக்கையில் உன் போட்டோ வந்தது, என்ன இந்த வீட்டில் நாடகமாடுறியா என்று சண்டை போட, சுடர் எப்படி போட்டோ மாறியது என்று எனக்கு தெரியாது என்கிறாள்.

இப்படி பத்திரிக்கை குறித்து சண்டை நடந்து கொண்டு இருக்க வீட்டிற்கு வரும் இன்ஸ்பெக்டர், எழிலிடம் உங்களுடைய மனைவி விபத்தில் சாகவில்லை. அவங்களை யாரோ திட்டமிட்டு கொலை செய்து இருக்காங்க என்று சொன்னதும் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. பதறிய எழில் என்ன சொல்றீங்க சார் என்று கேட்க ஆமாம் சார், இவன் தான் அந்த கொலைகாரன் என்று ரவுடியின் போட்டோவை காட்டுகிறார் போலீஸ். போட்டோவை பார்த்த எழில், இவனை என் கையால் தான் கொல்லனும் என்று ஆவேசப்படுகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Ninaithen Vandhai

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், ரவுடியின் போட்டோவை பார்த்த மனோகரி, இவன் மாட்டினால் நாமும் சேர்ந்து மாட்டிவிடுவோமே என்று பதறுகிறாள். இதை கவனித்த சுடர், டிரைவர் ராமைய்யாவிடம், அண்ணா, மனோகரியை கவனிச்சீங்களா, இந்துவை யாரோ கொலை பண்ணிட்டாங்க என்று போலீஸ் ரவுடி போட்டோவை காட்டியதில் இருந்தே அவங்களின் நடவடிக்கை சரியில்லை. இதில் ஏதோ விஷயம் இருக்கு கண்டுபிடிக்க வேண்டும் என்றால், அப்போது ராமைய்யா ஆமாம் சுடர், நானும் கவனித்தேன் என்று சொல்ல இருவரும் சேர்ந்து மனோகரியின் அறையை நோட்டமிடுகின்றனர்.

மனோகரியை மிரட்டும் ரௌடி: இதையடுத்து, அந்த ரௌடி மனோகரிக்கு தொடர்ந்து போன் செய்கிறான். அந்த போனை மனோகரி எடுக்காததால், கடுப்பான ரௌடி, மனோகரியை தேடி மருத்துவமனைக்கு வந்து விடுகிறான். ரௌடி மருத்துவமனைக்கு வருவதைப் பார்த்த மனோகரி, எழில் கண்ணில் அவன் படாதபடி படி, தனியாக ஒரு அறையில் வைத்து பேசுகிறான். உனக்கு அறிவு இருக்கா, இங்க வந்து இருக்க, உன்னை ஊரைவிட்டுத்தானே போக சொன்னேன் என்று ஆத்திரத்தில் கத்துகிறாள். உடனே ரௌடி, என்ன மேடம் திடீர்னு ஊரைவிட்டு போக சொன்ன கையில் காசு வேண்டாமா... பணம் கொடுங்க நான் போகிறேன் என்கிறான்.

என்னடா நேரம் பாத்து மிரட்டுறியா என்று மனோகரி கேட்க, நீங்க பண்ணதை எல்லாம் போலீசில் சொல்லிட்டு ஜெயிலுக்கு போக எனக்கு ஒன்னும் பயம் இல்ல, நான் போரடிச்ச ஜெயிலுக்குத்தான் போய்ட்டு வருவேன், ஆனால், உங்க நிலைமையை நினைச்சு பாருங்க என்று ரௌடி சொல்ல, இருவருக்கும் இடையே வாக்கு வாதம் நடக்கிறது. இதை தூரத்தில் இருந்து பார்க்கும் எழில், மனோகரி இவ்வளவு கோவமா யார் கூட பேசிட்டு இருக்க என்று பார்க்க நடந்து வருகிறான். இதை கவனித்த ரௌடி, ஒளிந்து கொள்கிறான். உடனே சுதாரித்துக்கொண்ட மனோகரி, எழிலிடம் எதையோ சொல்லி சமாளிக்கிறாள். ஆனால், மறைந்திருந்த ரௌடி வெளியில் போகும் போது எழில் கண்ணில் பட்டுவிட, எழில் அவனை தூரத்திக்கொண்டு ஓடுகிறான், இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X