கையில் துப்பாக்கியுடன் எழில்..பணத்தை திருட பிளான் போட்ட மனோகரி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், இந்துவை கொன்ற ரவுடி மருத்துவமனைக்கு வந்து மனோகரியிடம் பணத்தை கேட்டு மிரட்டிவிட்டு செல்லும் போது, எழில் அவனை பார்த்துவிட. அந்த ரவுடியை துரத்தி செல்ல அவன் எஸ்கேப் ஆகி விடுகிறான்.

இதையடுத்து வீட்டுக்கு வந்த மனோகரி ரவுடி 10 லட்சம் ரூபாய் பணத்தை கேட்ட விஷயத்தை நினைத்து புலம்பிக்கொண்டு இருக்கிறாள். மறுபக்கம் குழந்தைகள் அனைவரும் சேர்ந்து கனகவல்லியின் பிறந்த நாளுக்கு கேக் செய்து மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.

Zee tamil Ninaithen Vandhai

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், சுடரும் நான்கு குழந்தைகளும் சேர்ந்து கேக் செய்து அவனில் வைத்து கேக் முழுமையாக ரெடியானதும் கனவல்லியை அழைத்து சர்ப்ரைசாக ஹாப்பி பர்த் டே பாட்டி என்று வாழ்த்து சொல்லி சந்தேகப்படுகின்றனர். இதனால், கனவல்லி மிகவும் மகிழ்ச்சி அடைந்த சுடருக்கு நன்றி சொல்கிறாள்.

பணத்தை திருடும் மனோகரி: மறுபக்கம் ரவுடி 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த மனோகரிக்கு திடீரென ஒரு யோசனை தோன்ற செல்வியை கூப்பிட்டு, நீ கனகவல்லி ரூமுக்கு போய் யாருக்கும் தெரியாமல் 10 லட்சத்தை எடுத்து வா என்கிறாள். அப்போது செல்வி அய்யோ நானா எனக்கு பயமா இருக்கு முடியாது என்று சொல்ல, ஒரு வழியாக அவளை சம்மதிக்க வைக்கிறாள்.இதையடுத்து செல்வி, மனோகரி ரூமுக்குள் சென்று பணத்தை கொண்டு வர கிளம்புகிறாள்.

கையில் துப்பாக்கியுடன் எழில்: மறுபக்கம், வருத்தத்தில் இருக்கும் எழில், என் இந்துவை கொலை செய்தவன் வெளியில் ஜாலியா சுத்திக்கிட்டு இருக்கான். அவனை நான் கொல்லாமல் விடமாட்டேன். இன்னைக்கு ராத்திரிக்குள்ள அவன் கதையை முடிக்க வேண்டும் என்று, துப்பாக்கியை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்பும் போது, குழந்தைகள் வரும் சத்தம் கேட்டு துப்பாக்கியை மறைத்து வைக்கிறான் எழில், அப்போது, அப்பாவுக்கு ஆசை ஆசையாக நாங்களே செய்த கேக்கை கொடுத்து இன்னைக்கு பாட்டிக்கு பிறந்த நாள் என்பதால் நாங்களே செய்தோம் என்று சொல்ல கேக்கை சாப்பிட்ட எழில் சூப்பரா இருக்கு என்று பாராட்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X