ராமையா மீது திருட்டு பட்டம் கட்டும் மனோகரி.. எழில் எடுத்த முடிவு? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், ரவுடி 10 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதால் என்ன செய்வது என்று யோசித்து கொண்டிருந்த மனோகரிக்கு திடீரென ஒரு யோசனை தோன்ற செல்வியை கூப்பிட்டு, கனகவல்லி ரூமுக்கு போய் யாருக்கும் தெரியாமல் 10 லட்சத்தை எடுத்து வா என்கிறாள். இதையடுத்து செல்வி பணத்தை திருடிவிட இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடு: அதாவது கேக்கை சாப்பிட்ட எழில் சூப்பரா இருக்கு என்று சொல்லி குழந்தைகளை கட்டி அணைத்து பாராட்டுகிறான். அதன் பிறகு பிறந்தநாள் கொண்டாட்டம் முடிவடைந்து கனகவல்லி ரூமுக்கு வர பணம் காணாமல் போன விஷயம் தெரியவந்து அதிர்ச்சி அடைந்து, எழிலிடம் விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து, எழில் ராமையாவிடம் அம்மா ரூம், என் ரூமை தவிர அனைத்து இடத்திலும் பணத்தை தேடுங்க பணம் நிச்சயம் கிடைக்கும் என்கிறான்.

காணாமல் போன பணம்: ராமையாவிடம் வீடு முழுக்க பணத்தை தேடி பணம், எங்கேயும் இல்லை என்று எழிலிடம் சொல்கிறான். இப்போது மனோகரி, சுடர் ரூமில் தேடுங்க பணம் அங்கேதான் இருக்கும் என்று சொல்கிறாள். இதையடுத்து, ராமையா சுடர் ரூமில் தேடிவிட்டு பணம் இல்லை என்று சொல்கிறான். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மனோகரி, அடியே செல்வி பணத்தை எங்கேடி வெச்ச என்று கேட்கிறாள். நான் பணத்தை சுடர் ரூமில் வைக்கவில்லை என்று சொல்ல, அப்போ பணம் எங்கே என்று அதட்டுகிறாள்.
பணத்தை திருடிய செல்வி: பிளாஷ்கட்டில் பணத்தை திருடிய செல்வி, அதை சுடர் ரூமில் வைக்க வர, அவள் போனில் பேசியபடி இங்கும் அங்கும் நடந்து கொண்டு இருப்பதால், பணத்தை வைக்க முடியாமல் போகிறது. அவள் வெளியே வந்ததும் பணத்தை வைக்க உள்ளே நுழைய முயற்சி செய்ய, அந்த நேரம் பார்த்து கனகவல்லி தண்ணீர் குடிக்க வந்துவிட அப்போதும் வைக்க முடியாமல் போகிறது. இதனால் செல்வி பணத்தை வெளியில் தூங்கிக் கொண்டிருந்த ராமையாவின் பக்கத்தில் இருந்த பைக்குள் மறைத்து வைத்த விஷயத்தை மனோகரியிடம் சொல்லுகிறாள்
ராமையா மீது திருட்டு பட்டம்: பணம் கிடைக்காததால், எழில் இந்த விஷயத்தை இப்படியே விடக்கூடாது போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து விடலாம் என்று முடிவு எடுக்க மனோகரி வீட்ல எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தாச்சு.. ஆனா இன்னும் ராமையாவோட பையில் தேடி பார்க்கலையே என்று சொல்ல அனைவரும் அதைக் கேட்டு ஷாக் ஆகின்றனர். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத் தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











