கையும் களவுமாக சிக்கிய செல்வி.. நாடகமாடிய மனோகரி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், வீட்டில் இருந்த பணம் காணாமல் போனதால், எழில் ராமையாவிடம் வீடு முழுக்க பணத்தை தேட சொல்லுகிறான். ராமையாவும் மனோகரி அறை, சுடர் அறை என அனைத்து இடத்திலும் தேடுகிறான். வீடு முழுக்க தேடியும் பணம் கிடைக்காததால், எழில் இந்த விஷயத்தை இப்படியே விடக்கூடாது போலீசில் கம்ப்ளைன்ட் கொடுத்து விடலாம் என்று முடிவு எடுக்கிறான்
அப்போது, மனோகரி வீட்ல எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தாச்சு.. ஆனா இன்னும் ராமையாவோட பையில் தேடி பார்க்கலையே என்று சொல்ல அனைவரும் அதைக் கேட்டு ஷாக் ஆகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், ராமையாவின் பையை சோதனை போட்டதில், அதில் பணம் இருப்பதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து எழில் நான் உங்களை எப்படி நம்புனேன், உங்க மீது எவ்வளவு நம்பிக்கை வைத்து இருந்தேன், ஏன் இப்படி செய்தீங்க என்று கண்டபடி திட்டிவீட்டை விட்டு வெளியே போக சொல்ல, ராமையா மொத்தமாக உடைந்து விடுகிறார்.
வசமாக சிக்கிய செல்வி: இதையடுத்து குழந்தைகள் கீழே வந்து விட, கவின் பணத்தை திருடியது ராமையா இல்லை செல்வி தான் என்று வீடியோ ஆதாரத்தை போட்டு காட்ட மனோகரி அதிர்ச்சி அடைகிறாள். உடனே அடிப்பாவி நீயா இப்படி பண்ண இனிமே இந்த வீட்ல நீ இருக்கவே கூடாது, வெளியே போ என்று அடித்து டிராமா போடுகிறாள். உடனே செல்வி எழில் காலில் விழுந்து ஐயா நான் தெரியாமல் பண்ணிட்டேன் என்னை மன்னிச்சிடுங்க என்று கெஞ்சி கேட்க எழில் மன்னித்து விட்டதாக சொல்கிறான்.
வீட்டை விட்டு வெளியேறும் ராமையா: இதையடுத்து, ராமையா, எழில் சொன்ன வார்த்தைகளால் மொத்தமாக உடைந்து போய் பேக்கை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு கிளம்ப தயாராகிறார். இதைப் பார்த்து சுடர் மற்றும் குழந்தைகள் ராமையாவை எங்க போறீங்க, நீங்க இல்லாமல் நாங்க யார் கூட விளையாடுவோம். போகாதீங்க ராமையா என்று கதறி அழுகின்றனர். இதைப்பார்த்த எழில், ராமையா என்னை மன்னிச்சிடுங்க, நான் தப்பு பண்ணிட்டேன், இனிமேல் இப்படி நடக்காது என்று கட்டிப்பிடித்து கதறி அழுகிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











