அடுத்தடுத்து பல்பு வாங்கிய மனோகரி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், மனோகரி ஹாஸ்பிடலுக்கு கிளம்ப எழில் நீ ஹாஸ்பிடல் வரவேண்டாம் உனக்கும் எனக்கும் கல்யாணமாக போகுது.. நீ பசங்களோட இரு, அப்போது தான் அவங்களுக்கு உன்னை பிடிக்கும் என்று சொல்ல மனோகரி கடுப்பாகிறாள். அதன் பிறகு செல்வி என்னமா ஹாஸ்பிடலுக்கு போகலையா என்று கேட்க, இல்ல எழில் பசங்களோட இரு என்று சொல்லிவிட்டதாக சொல்கிறாள்.

உடனே செல்வி, பசங்கள உங்க வழிக்கு கொண்டு வருவதெல்லாம் ரொம்ப ஈசி.. சுடர் அவங்களுக்கு பிரியாணி எல்லாம் சமைத்து கொடுத்து தான் வளைச்சு போட்டா என்று சொல்ல மனோகரி சூப்பர் ஐடியா அப்போ நானே என்னுடைய கையால பிரியாணி செஞ்சு பசங்களுக்கு பரிமாறுகிறேன் என்று முடிவு எடுக்கிறாள். இதையடுத்து பிரியாணி சமைத்துக்கொடுக்க அதில், உப்புக்கு பதிலாக சர்க்கரையை போட்டு சமைக்க, அதை குழந்தைகள் சாப்பிடாமலே வேண்டாம் என்கின்றனர். இன்று நடக்கப்போகிறதை பார்க்கலாம்.

Zee tamil Ninaithen Vandhai

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், மனோகரி ஐஸ்கிரீம் ஆர்டர் செய்து குழந்தைகளுக்கும் கொடுக்க ஐஸ்கிரீம் என ஜாலியாக வாங்கி சாப்பிடும் குழந்தைகள் எழில் வந்ததும் ஒரே நேரத்தில் திரும்பி, உடம்பு சரியில்லை என்று சீன்போட்டு, எல்லாத்துக்கும் மனோகரி ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தது தான் இதற்கு காரணம் என கோர்த்து விடுகின்றனர். இதனால் மனோகரியின் இந்த திட்டமும் தோல்வியடைகிறது.

கனவு காணும் சுடர்: அடுத்ததாக செல்வி பசங்களை வெளியே கூட்டிட்டு போய் ஏதாவது வாங்கி கொடுங்க என்று சொல்ல நாளைக்கு கூட்டிட்டு போய் ஏதாச்சு வாங்கி தரேன் என்று முடிவெடுக்கிறாள். ஹாஸ்பிடலுக்கு போன எழில், கனகவல்லிக்கு போன் போட்டு முக்கியமான பைல் ஒன்றை வீட்டில் மறந்து விட்டதாகவும் அதை கொடுத்து அனுப்புமாறு சொல்ல கனகவல்லி சுடரிடம் கொடுத்து அனுப்பி வைக்கிறாள்.

சுடர் ஹாஸ்பிடலுக்கு வர எழில் அவளுக்கு முதலுதவி செய்து ரொமான்டிக்காக இருப்பது போலவே தோன்றுகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X