மனோகரி செய்த சூழ்ச்சி.. போதையில் தள்ளாடும் சுடர்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைததேன் வந்தாய் சீரியலில், சுடர் எதுக்கு எழில் சாரை கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என்று ஆசைப்படுறீங்க, நீங்க எழிலை கல்யாணம் செய்து கொள்வது பசங்களுக்கே பிடிக்கவில்லை அப்புறம் எதுக்கு இந்த கல்யாணம் என்று கேட்க, கடுப்பான மனோகரி நான் கல்யாணம் பண்ணிக்கிட்டு, இந்த வீட்டை விட்டு உன்னையும் பசங்களையும் வெளியே அனுப்புறேன் பாருடி என்று சவால் விடுகிறாள்
இதையடுத்து, எழில் குடும்பத்தோடு ரெஸ்டாரண்டுக்கு வர, அங்கு வரும் ரௌடி கும்பல் ஒன்று, எழில், மனோகரியையும் பார்த்து, என்ன சார் உங்க செட்டப் கூட வந்துட்டீங்க போல, ஓட்டலில் இரண்டு பேரும் ரூம் போட்டு மாட்டிக்கிட்டு சும்மா கல்யாணம் பன்னிக்கிறேனு சீன் போட்டீங்கனு சொல்ல, கோவப்பட்ட எழில் அவர்களை அடிக்கப்போகிறான் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில்,ரெஸ்டாரண்டில் அசிங்கமாப பேசிய ரௌடி கும்பலிடம் எழில் சண்டைக்கு போக அனைவரும் எழிலை தடுக்கின்றனர். இதைப்பார்த்து குழந்தைகள் பயந்து போகின்றனர். அப்போது கனகவல்லி, இவங்களிடம் சண்டை போட்டால் நமக்குத்தான் அசிங்கம் என்று சொல்லி, எழிலை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருகிறாள்.
வீட்டுக்கு வந்ததும் மனோகரியின் அப்பா, ரெஸ்டாரண்டில் நடந்தது எதுவும் எனக்கு சரியாக படல உடனடியாக இவங்களுக்கு நிச்சயம் பண்ணியே ஆக வேண்டும் என்று சொல்ல கனகவல்லியும் அதற்கு சம்மதம் சொல்கிறாள்.
சவால் விட்ட சுடர்: அதைத்தொடர்ந்து, மனோகரி மற்றும் செல்வி பேசிக் கொண்டிருக்கும் போது சுடர் அங்கு வர என்னமோ கல்யாணத்தை நிறுத்திடுவேனு சவால் விட்ட.. இப்ப நிச்சயமே நடக்க போகுது என்று நக்கலாக பேச, சுடர் கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்காது என்று சொல்கிறாள். அதுமட்டுமின்றி செல்வியை இரண்டு விரலில் ஒன்று தொடு என்று சொல்ல அவளும் ஒரு விரலை தொட அச்சச்சோ என்ன செல்வி இந்த விரல தொட்டுட்ட, நிச்சயத்தையே நிறுத்த சொல்லிட்டியே என்று ஷாக் கொடுக்கிறாள்.
போதையில் தள்ளாடும் சுடர்: உடனே மனோகரி இந்த சுடரை ஏதாவது செய்யணும் என்று சொல்லி ஜூஸில் சரக்கைக் கலந்து அதை செல்வியிடம் கொடுத்து அவளுக்கு எப்படியாவது கொடுத்து விடு என்று சொல்கிறாள். இந்த நேரம் பார்த்து ராமையா வர, இந்த சரக்கு கலந்த ஜூசை நாம கொடுக்கிறதவிட ராமையா கொடுத்தால் தான் சரியா இருக்கும் என்று அவரிடம் கொடுத்து அனுப்புகிறாள். அதே போல் ராமையா கொண்டு வந்து கொடுத்த ஜூசை குடித்த சுடர் போதையில் தள்ளாடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











