மோதிரத்தை திருடி மனோகரிக்கு ஆப்பு வைத்த அஞ்சலி… நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், சுடருக்கு ஜூஸில் சரக்கைக் கலந்து கொடுத்துவிட, அதை குடித்த சுடர் தள்ளாடி வருவதை பார்த்த ராமையா, சரக்கு அடிச்சியா என்று கேட்க ஒரு டம்ளர் குடிச்சேன் நல்லா இருந்தது அதனால இன்னொரு டம்ளர் குடிச்சிட்ட என்று சொல்கிறாள்.
அதைத் தொடர்ந்து, மனோகரி எழிலிடம் சுடரை விட்டு கொஞ்சம் பார்த்துக்கோ என்று சொல்லி நழுவி கொள்ள எழில், சுடரை ரூமுக்குள்ள அழைத்து சென்று படுக்க வைக்கிறான். அப்போது சுடர், நீங்களும் என் கூட தான் இருக்கணும் என்று புலம்பியபடி எழில் கையை பிடித்து இழுக்கிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய் : இன்றை எபிசோடில், சுடரை சமாதானப்படுத்தி தூங்க வைத்து விட்டு எழில் கீழே வர நிச்சயதார்த்த ஏற்பாடுகள் தடபுடலாக நடந்துக்கொண்டு இருக்கிறது. கனகவல்லி இந்துவின் மோதிரத்தை எடுத்து வந்து வைக்கிறாள். இதைப்பார்த்த குழந்தைகள் இனிமேல் கல்யாணத்தை நிறுத்தவே முடியாததா? மனோகரி கையில் எங்க அம்மாவின் மோதிரம் இருப்பது எனக்கு சும்மா பிடிக்கவே இல்லை என்று அபி சொல்ல, கவின் இதுக்குமேல நாம ஒன்னும் பண்ண முடியாது. அவ்வளவு தான் என்று அனைவரும் சோகமாக முகத்துடன், நிச்சயம் நடக்கும் இடத்திற்கு வருகின்றனர்.
அப்போது, கனகவல்லியிடம் அஞ்சலி நிச்சயதார்த்தம்னா என்ன என்று கேட்க, கனவல்லி குழந்தைகளுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டு இருக்கிறார். இந்த நேரம் பார்த்து அஞ்சலி இந்துவின் மோதிரத்தை எடுத்துக்கொண்டு, போதையில் தூங்கிக்கொண்டிருக்கும் சுடரின் கையில் போட்டு விட்டு,எதுவுமே தெரியாதது போல அமைதியாக உட்கார்ந்து விடுகிறாள்.
காணாமல் போன மோதிரம்: இதையடுத்து, அய்யர் மந்திரங்களை சொல்லி மோதிரம் மாற்றி கொள்ள சொல்லும் போது தட்டில் இந்துவின் மோதிரம் காணாமல் போய் விடுகிறது. இதையடுத்து கனகவல்லி அதிர்ச்சி அடைந்து தனது கை பையில் தேடுகிறாள். அதிலும் மோதிரம் இல்லாததால், வீடு முழுக்க மோதிரத்தை தேடியும் எங்கேயும் கிடைக்காத நிலையில் மனோகரி, எழில், கனகவல்லி என அனைவரும் அப்செட்டாகின்றனர். இந்த நேரத்தில் அங்கு வந்த அஞ்சலி மோதிரத்தை நான் எடுத்துட்டு போய் சுடர் கையில் போட்டு விட்டேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











