நடந்து முடிந்த நிச்சயம்.. சுடர் கனவில் வரும் எழில்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், நிச்சயத்தின் போது, அய்யர் மந்திரங்களை சொல்லி மோதிரம் மாற்றி கொள்ள சொல்லும் போது தட்டில் இந்துவின் மோதிரம் காணாமல் போய் விடுகிறது. இதையடுத்து கனகவல்லி அதிர்ச்சி அடைந்து தனது கை பையில் தேடுகிறாள்.
அதிலும் மோதிரம் இல்லாததால், வீடு முழுக்க மோதிரத்தை தேடியும் எங்கேயும் கிடைக்காத நிலையில் மனோகரி, எழில், கனகவல்லி என அனைவரும் அப்செட்டாகுகின்றனர். இந்த நேரத்தில் அங்கு வந்த அஞ்சலி மோதிரத்தை நான் எடுத்துட்டு போய் சுடர் கையில் போட்டு விட்டேன் என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து, இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய சீரியலில்,அஞ்சலி சொன்னதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்து எதுக்கு சுடர் கையில போட்டு விட்ட என்று கேள்வி கேட்கின்றனர். மனோகரி வேக வேகமாக ஓடி வந்து சுடர் கையில் இருக்கும் மோதிரத்தை கழட்ட முயற்சி செய்ய மோதிரம் கழட்ட முடியாமல் போகிறது. இதனால் எழில் மனோகரியை தடுத்து வேறு மோதிரம் மாற்றிக் கொள்ளலாம் என்று சொல்கிறான். கனகவல்லி வேறொரு மோதிரத்தை கொண்டு வந்து கொடுக்க இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்கின்றனர்.
கனவில் வருவது எழில்: அதன் பிறகு இந்து மற்றும் தீபா இருவரும் எழிலுக்கு நேற்று நடந்த நிச்சயம் பற்றி பேசிக்கொண்டிருக்க அங்கு வந்த சுடர், எனக்கு அடிக்கடி கல்யாணம் ஆகுற மாதிரி, ரொமான்ஸ் பண்ணு மாதிரி கனவு வருதுன்னு சொன்னேன்ல. அந்த கனவுல வரது எழில் தான் என்ற உண்மையை உடைக்க இந்து அதிர்ச்சி அடைகிறாள்.

டவலுடன் வரும் எழில்: அடுத்ததாக சுடர் குளிக்க போக குழாயில் தண்ணீர் வராமல் இருக்க அவள் வெளியே வர கனகவல்லி என்னாச்சி என்று கேட்டு மனோகரி ரூமில் குளிக்க சொல்லி அனுப்பி வைக்கிறாள். ஆனால் மனோகரி என்னுடைய ரூமில் குளிக்க கூடாது என துரத்தி விடுகிறாள். இதனால் சுடர் குழந்தைகளின் ரூமுக்கு வந்து குளிக்கிறாள். இதே நேரத்தில் எழிலும் ரூமிலும் தண்ணீர் வராத நிலையில் அவனும் குழந்தைகள் ரூமுக்கு குளிக்க வருகிறான்.

டவலுடன் வந்த எழிலைப்பார்த்து என்ன சார் இப்படி வந்து இருக்கீங்க என்று கேட்டு பயந்து போய் சுடர் கத்தி விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











