ரூமில் ஜோடியாக எழில், சுடர்.. மனோகரிக்கு எகிறிய பிபி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைததேன் வந்தாய் சீரியலில், இந்து மற்றும் தீபா இருவரும் எழிலுக்கு நேற்று நடந்த நிச்சயம் பற்றி பேசிக்கொண்டிருக்க அங்கு வந்த சுடர், எனக்கு அடிக்கடி கல்யாணம் ஆகுற மாதிரி, ரொமான்ஸ் பண்ற மாதிரி கனவு வருதுன்னு சொன்னேன்ல. அந்த கனவுல வரது எழில் தான் என்ற உண்மையை உடைக்க இந்து அதிர்ச்சி அடைகிறாள்.
அடுத்ததாக சுடர் குளிக்க போக குழாயில் தண்ணீர் வராமல் இருக்க அவள் வெளியே வர கனகவல்லி என்னாச்சு என்று கேட்டு மனோகரி ரூமில் குளிக்க சொல்லி அனுப்பி வைக்கிறாள். இதையடுத்து இன்று நடக்கப்போவது என்ன என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோட், எழில் மற்றும் சுடர் என இருவரும் குழந்தைகள் ரூமில் சிக்கிக் கொள்ள டோர் லாக் ஆகி விடுகிறது. இருவரும் சேர்ந்து சத்தம் போட வீட்டில் உள்ள எல்லோரும் ஒன்று கூடி விடுகின்றனர். ஆளாளுக்கு கதவை திறக்க முயற்சி செய்ய முடியாமல் போக டூப்ளிகேட் சாவி செய்பவனுக்கு போன் போட்டு கூப்பிட அவன் இரவு நேரத்தில் வர முடியாது நாளைக்கு வருவதாக சொல்கிறான். இதனால் கனகவல்லி எழில் மற்றும் சுடர் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் உள்ளவே இருக்கட்டும் நாளைக்கு காலையில சாவி செய்பவனையோ அல்லது கார்பென்டரையோ கூப்பிட்டு கதவை திறந்து விடலாம் என்று சொல்கிறாள்.
கடுப்பாகும் மனோகரி: இதனால் மனோகரி பயங்கர கடுப்பாகிறாள். குழந்தைகள் தூங்கப் போக அப்போது சுடர் டிக் டிக் யாரது என்று கதவு பக்கத்தில் வந்து பேச அஞ்சலி நான் அஞ்சலி என்று சொல்கிறாள். பசிக்குது சாப்பாடு வேண்டும் என்று சொன்னதும் அஞ்சலி கீழே வந்து சொல்ல மாடியில் இருந்து பாக்ஸில் சாப்பாட்டை கட்டி அனுப்பி வைக்க ஜன்னல் வழியாக எடுத்து சாப்பிடுகின்றனர்.
செல்வி மனோகரியிடம் என்னமா நேத்து தான் உங்களுக்கு நிச்சயமாச்சு. இப்போ அவங்க ரெண்டு பேரும் ஒரே ரூமுக்குள்ள இருக்காங்க என்று ஏற்றி விடுகிறாள். அடுத்து மனோகரி அவளுக்கு தெரிந்தவர்களுக்கு எல்லாம் ஃபோனை போட்டு ரூமை திறக்க முயற்சி செய்ய எல்லோரும் நைட்டு நேரத்தில் வர முடியாது என்று மறுத்து விடுகின்றனர்.
இவர்கள் பேசுவதை பக்கத்தில் நின்று கேட்ட இந்து எழில் ரூம் சாவியும் குழந்தைகள் ரூம் சாவியும் ஒன்றுதான் என்று சொல்கிறாள். அது மனோகரி காதுக்கு விழாத நிலையில் தீபா மூலமாக விஷயத்தை சொல்ல முடிவெடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











