இந்துவின் ஆவி படுத்தும் பாடு.. அதிர்ச்சியில் மனோகரி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், ரூம் பாய் போனில் இருந்து குரல் மாற்றி பேசியது சுடர் தான் என்பதை மனோகரி தெரிந்து கொண்டதை அடுத்து, அவளை ரவுகளை வைத்து கொல்ல சொல்கிறாள்.

ரவுடிகள் ரோட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவளை கொல்ல துரத்துகின்றனர். இதைப் பார்த்த இந்துவின் ஆவி சுடரை காப்பாற்றுவதற்காக அவளது உடம்புக்குள் புகுந்து ரவுடிகளை அடித்து துரத்துகிறது. பிறகு இந்துவின் ஆத்மாவுடன் வீட்டுக்குள் நுழைகிறாள் சுடர் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Ninaithen Vandhai

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து இன்றைய எபிசோடில், அஞ்சலி ட்ராயிங் செய்து கொண்டிருக்க அங்கு சுடராக வந்த இந்து அம்மா வந்து இருக்கேன் என்று சொல்லி குழந்தைகளோடு விளையாடி சந்தோஷப்படுகிறாள். பிறகு குழந்தைகள் பசிப்பதாக சொன்னதும் வெஜிடபிள் பிரியாணி சமைத்து பிள்ளைகளை சாப்பிட வைத்து சந்தோஷப்படுகிறாள். அடுத்ததாக கனகவல்லி ரூமுக்கு வந்து அத்தை என்று சொல்லி கூப்பிட கனகவல்லி என்ன புதுசா அத்தைனு கூப்பிடுற? நீ அப்படி கூப்பிட மாட்டியே என்று குழப்பம் அடைய சுடர் எதையோ சொல்லி சமாளிக்கிறாள். அதன்பிறகு கனகவல்லிக்கு மாத்திரை கொடுத்துவிட்டு வெளியே வருகிறாள்.

இதையடுத்து இந்து சுடர் உருவத்தில் எழில் ரூமுக்குள் நுழைகிறாள். எழில் தூங்கிக் கொண்டிருக்க அவன் பக்கத்தில் உட்காரும் சுடர் உங்களோடு சேர்ந்து வாழணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன் ஆனால் அது ரொம்ப நாள் நிலைக்காம போயிடுச்சு என்று பேசி ஃபீல் பண்ணுகிறாள். பிறகு எழில் பக்கத்தில் படுத்து அவன் மீது கை போட்டு கொள்கிறாள்.

அதிர்ச்சியில் மனோகரி: சுடர் குழந்தைகளோடு விளையாடுவதை பார்க்க இந்துவை போலவே இருந்ததால், மனோகரிக்கு சந்தேகம் வர அவள் சுடரை கண்காணிக்கிறாள். அப்போது சுடர் கடந்து கொள்வது எல்லாம் இந்துவை போல இருந்ததால், சாமியாருக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அவரும், சுடரின் உடம்பில் இந்துவின் ஆவி இருப்பதாக சொல்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த மனோகரி, அவளை எப்படியாவது வெளியில் அனுப்ப வேண்டும் என்று சொல்ல, சாமியார் கொஞ்சம் பெருமையாக இரு, அதற்கான நேரம் வரும் என்கிறார். இதையடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X