கல்யாணம் தேவையா? எழிலிடம் சண்டை போடும் சுடர்... நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில் சுடருக்கு விசா வந்துவிட அதை சாமி முன்வைத்து பூஜை செய்கிறாள். மறுபக்கம் வீட்டிற்கு வரும் அய்யர் எழில், மனோகரிக்கு பொருத்தம் நல்லா இருக்கு. கல்யாண பத்திரிகையை எழுதி கொடுத்து, போட்டோ முன்பு வைத்து பூஜை செய்து நல்ல நேரத்தில் பத்திரிக்கை அடிக்க சொல்கிறார்.

அடுத்ததாக ராமையா, சுடர் குழந்தையை கூட்டி கொண்டு காரில் ஸ்கூலுக்கு போகும் போது, கல்யாண பத்திரிக்கை அடிக்கிற அளவுக்கு வந்துடுச்சு. இந்த கல்யாணத்தை நிறுத்திடுவேன்னு சொன்ன என்னாச்சு என்று கேட்க, பொறுத்திருந்து பாருங்க, இந்த கல்யாணம் கண்டிப்பா நிற்கும் என்கிறாள் இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Ninaithen Vandhai

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், சாமியார் எழுதி கொடுத்த பத்திரிக்கை, போட்டோ ஆகியற்றை பூஜையறையில் வைத்திருக்கும் நிலையில் காற்றில் மனோகரியின் போட்டோ பறந்து விளக்கில் பட்டு எரிந்து விடுகிறது. அதே நேரம், சுடர் தன்னுடைய போட்டோ மற்றும் விசாவை வைத்திருக்கும் நிலையில் அந்த போட்டோ அப்படியே இடம் மாறி விடுகிறது. இதையடுத்து எழில் அனுப்பிய நபர் வீட்டிற்கு வந்து ஐயா பத்திரிக்கை அடிக்க சாமியார் கொடுத்த போட்டோ, பத்திரிக்கை ஆகியவற்றை வாங்கிட்டு வர சொன்னதாக சொல்ல, கனகவல்லி பத்திரிக்கை எழுதிய பேப்பரையும் போட்டோவையும் கொடுத்து அனுப்புகிறாள்.

குழந்தைகளுக்கு பிடிக்கல: இதையடுத்து, ஸ்கூலில் குழந்தைகளை விட்டு விட்டு நேராக எழிலின் ஹாஸ்பிடலுக்கு வரும் சுடர், எழிலிடம் உங்க 4 பசங்களுக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல, உங்களுக்கு இந்த கல்யாணம் தேவையா என்று சத்தம் போடுகிறாள். இதைக்கேட்டு கடுப்பான எழில், நானும் மனோகரியும் கல்யாணம் பண்ணிக்கிட்டா உனக்கு என்ன பிரச்சனை, இந்த விஷயத்தில் குழந்தைகளை வைத்து என்ன எமோஷனல் ஆக்காதே. நான் எந்த முடிவு எடுத்தாலும் அது குழந்தைகளில் நல்லதிற்காகத்தான் இருக்கும். நீ தேவையில்லாமல், இந்த விஷயத்திற்குள் வராதே, அன்னைக்கு மனோகரி என் மானத்தை காப்பாற்றினா, ஒரு நன்றி கடனுக்காவது நான் மனோகரியை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்,

வார்டன்: இந்த முடிவில் நான் உறுதியாக இருக்கிறேன் நீ உன்னுடைய லிமிட் என்ன என்று தெரிந்து நடந்து கொள் என்று கத்துகிறான். அவன், சுடரைப்பார்த்து கத்திக்கொண்டே அவளின் அருகில் வர திடீரென, எழிலின் கை சுடரின் இடுப்பில் இருக்கிறது. இதைப்பார்த்து ஷாக்கான எழில் என்ன என்று புரியாமல் முழிக்கிறான். இடுப்பில் எழில் கை வைத்ததால், சுடரும் ஒன்றும் புரியாமல், ம்ம்ம்ம்... சரி... சரி என்று சொல்லி அங்கிருந்து ஒருவிதமான ஏக்கத்தோடு வீட்டிற்கு வருகிறாள், வீட்டிற்கு வந்ததும் அவளது அப்பா போன் செய்து அந்த வார்டன் சாரதா கிடைச்சிட்டாங்க, அவங்களுக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட் நடந்து ஹாஸ்பிடலில் இருக்காங்களாம் என்று சொல்ல சுடர் சந்தோசப்படுகிறாள்.

இதை ஒட்டு கேட்கும் மனோகரிக்கு தகவல் கொடுக்க அந்த ரவுடி ஹாஸ்பிடல் கிளம்பி வருகிறான். அதே போல் சுடர் அப்பாவும் ஹாஸ்பிடலுக்கு வர முன்னாடியே வரும் ரவுடி அந்த சாரதாவை வேறொரு பெட்டிற்கு மாற்றி விடுகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X