சுடர், எழில் காதல்? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழிலின் மருத்துவமனைக்கு வரும் சுடர், எழிலிடம் உங்க 4 பசங்களுக்கும் இந்த கல்யாணத்தில் விருப்பம் இல்ல, உங்களுக்கு இந்த கல்யாணம் தேவையா என்று சத்தம் போடுகிறாள். இதைக்கேட்டு கடுப்பான எழில், சுடரைப்பார்த்து கத்திக்கொண்டே அவளின் அருகில் வர திடீரென, எழிலின் கை சுடரின் இடுப்பில் இருக்கிறது. இதைப்பார்த்து ஷாக்கான எழில் என்ன என்று புரியாமலை முழிக்கிறான்
குழப்பத்தோடு வீட்டிற்கு சுடர் வீட்டிற்கு வர, சுடரின் அப்பா போன் செய்து அந்த வார்டன் சாரதா கிடைச்சிட்டாங்க, அவங்களுக்கு ஒரு சின்ன ஆக்சிடென்ட் நடந்து ஹாஸ்பிடலில் இருப்பதாக சொல்கிறாள். இதை ஒட்டு கேட்ட மனோகரி, ரவுடிக்கு தகவல் கொடுக்க ஹாஸ்பிடலுக்கு வந்த ரவுடி சாரதாவை வேறொரு பெட்டிற்கு மாற்றி விடுகிறான்.இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், சுடரின் அப்பா ஹாஸ்டல் வார்டனை பார்க்க வந்து சாரதாவை தேடுகிறார். சாரதாவை எங்கு தேடியும் கிடைக்காததால் வருத்தத்துடன் மருத்துவமனையில் இருந்து கிளப்புகிறார். மறுபக்கம் வீட்டில், சுடர் துணி மாற்றிக் கொண்டிருக்கும் போது, அவளுக்கு ஹாஸ்பிடலில் எழில் இடுப்பில் கை வைத்தது நினைவுக்கு வந்து வந்து போக குழப்பம் அடைகிறாள். இந்த நேரத்தில் அஞ்சலி ரூமுக்குள் வந்து இடுப்பில் கை வைக்க எனக்கு இடுப்புல காயம் ஏற்பட்டு இருக்கு அதனால கை வைக்காத என்று சொல்கிறாள். இதைத்தொடர்ந்து அஞ்சலி அப்படின்னா என் அப்பாகிட்ட வா அவரே உனக்கு ஆயின்மென்ட் போட்டு விடுவாரு என்று சொல்லி அழைத்துச் செல்கிறாள்.
ரொமான்ஸ்: எழில் வா சுடர் மருந்து போட்டு விடுறேன் என்று கூப்பிட சுடர் வேண்டாம் வேண்டாம் என்று பின்னாடியே நகர்ந்து வந்து கீழே விழ போக எழில் அவளை தாங்கிப் பிடிக்க இருவரும் ரொமான்ஸ் மோடிற்கு செல்கின்றனர். அதன் பிறகு சுடர் எனக்கு வலியெல்லாம் இல்லை என்று சொல்லி அங்கிருந்து கிளம்பி வருகிறாள். அதன் பிறகு சுடருக்கு எழில் கையில் மல்லிகை பூவை சுற்றிக்கொண்டு மாப்பிள்ளை கோலத்தில் இருப்பது போலவும், ரொமான்சாக பேசுவது போலவும் மீண்டும் மீண்டும் தோன்ற சுடர் ஏன் இப்படி எல்லாம் தோணுது என மேலும் குழப்பம் அடைகிறாள்.
பிறகு இந்து மற்றும் தீபாவிடம் இந்த விஷயத்தை சொல்ல கனவு வந்தால் நல்லது தானே என்று சொல்கின்றனர். உடனே இந்து கனவில் யார் முகம் வந்து என்று சொல்ல யார் முகமும் வரவில்லை என்கிறார். யார் முகமும் வரவில்லை என்றால் அந்த கனவு பலிக்காது, கனவில் முகம் வந்தால் தான் அது பளிக்கும் என்று சொல்ல வருத்தப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











