இந்து கொலையில் போலீசுக்கு கிடைத்த துப்பு..வசமாக சிக்கும் மனோகரி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், சுடரின் அப்பா ஹாஸ்டலில் இருக்கும் வார்டன் சாரதாவை பார்க்க வருகிறார். ரவுடிகள் சாரதாவை ரூம் மாற்றிவிடுவதால், சாரதாவை எங்கு தேடியும் கிடைக்காததால் வருத்தத்துடன் மருத்துவமனையில் இருந்து கிளப்புகிறார்.
மறுபக்கம் வீட்டில், சுடர் துணி மாற்றிக் கொண்டிருக்கும் போது, அவளுக்கு ஹாஸ்பிடலில் எழில் இடுப்பில் கை வைத்தது நினைவுக்கு வந்து வந்து போக குழப்பம் அடைகிறாள். இந்த விஷயத்தை சுடர் இந்துவிடம் சொல்லுகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், வீட்டிற்கு வரும் இன்ஸ்பெக்டர், உங்களுடைய மனைவி விபத்தில் சாகவில்லை. அவங்களை திட்டமிட்டு கொலை செய்து இருக்காங்க என்று சொன்னதும் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைகிறது. பதறிய எழில் என்ன சொல்றீங்க சார் என்று சொல்ல, ஆமாம் சார், அவன் அந்த கொலைகாரன் என்று ரவுடியின் போட்டோவை காட்டுகிறார் போலீஸ். போட்டோவை பார்த்த எழில், இதுவரைக்கும் டாக்டராக எவ்வளவோ பேரை காப்பாற்றி இருக்கேன், ஆனால் இவனை என் கையால் தான் கொல்லனும் என்று ஆவேசப்படுகிறான். ஆத்திரப்படாதீங்க சார், போலீஸ் இன்னும் ஓரு வாரத்தில் அவனை பிடித்து ஒப்படைகிறோம் என்று சொல்கிறார்.
வசமா சிக்கும் மனோகரி: இதையடுத்து எழில் இந்துவை நினைத்து வருத்தமாக இருக்க அங்கு வந்த சுடர் கவலைப்படாதீங்க சார், என்று ஆறுதல் சொல்கிறாள். மறுபக்கம் மனோகரி போலீஸ் போட்டோவை காட்டிய ரவுடிக்கு போன் போட்டு போலீசுக்கு நீ தான் கொலை பண்ணேன்ற உண்மை தெரிந்து போச்சு.. நீ ஊரை விட்டு போய்விடு என்று சொல்கிறாள்.
அடுத்து என்ன: அடுத்ததாக எழில் தூங்கி கொண்டிருக்கும் நான்கு குழந்தைகளின் முகத்தை பார்த்து உங்களுக்காக தான் நான் என் கோபத்தை அடக்கிட்டு இருக்கேன், உங்களுக்காக எப்பவும் நான் இருப்பேன் என்று பேசுகிறான். பிறகு ரவுடி தொடர்ந்து மனோகரிக்கு போன் செய்ய அவள் போனை எடுக்காமல் இருக்கிறாள். ஹாஸ்பிடலுக்கு கிளம்பி வந்த ரவுடி மனோகரியை சந்தித்து பேசி கொண்டிருக்கும் போது எழில் ரவுடியின் முகத்தை பார்த்து அவனை நெருங்கி வருகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











