சுடரின் உடம்புக்குள் புகுந்த இந்துவின் ஆவி.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், மனோகரி எழிலுடன் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்த திட்டம் போட குழந்தைகள் இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என தொடர்ந்து இடையூறு செய்து இருவரும் சேர்ந்து போட்டோ எடுக்க விடாமல் செய்கின்றனர்.
எழில் மனோகரி திருமணத்திற்கு காரணமாக இருந்த அந்த ரைட் நடந்த ஓட்டலுக்கு வரும் சுடர். ஒரு ரூம் பாயிடம் மனோகரி குறித்தும், அன்னைக்கு நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க பயந்து போன அந்த ரூம் பாய், ஓட முடிவு செய்கிறான். அப்போது அவன் வைத்திருந்த போனைத் தவற விடுகிறான். அந்த போனை எடுக்கும் சுடர் அதில் மனோகரியின் என் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து இன்றைய எபிசோடில், ரூம் பாய் போனில் இருந்து மனோகரிக்கு ஒரு சாஃப்ட்வேர் உதவியுடன் ஆண் குரலில் பேசுகிறாள். அதில், மனோகரி உன்னுடைய தில்லாலங்கடி வேலை எல்லாம் எனக்கு தெரியும், நான் சொல்ற இடத்துக்கு பணத்தை எடுத்துட்டு வா, அப்படி இல்லனா நான் எழிலுக்கு போன் பண்ணி எல்லா விஷயத்தையும் சொல்லிவிடுவேன். அப்புறம் என் மேல கோவப்படக்கூடாது என்று மிரட்டுகிறாள். இதைக்கேட்டு காண்டான, மனோகரி போனை வைத்து விட்டு நம்மள மிரட்டுவது யாராக இருக்கும் என யோசிக்கிறாள். பிறகு அங்கு வந்த கனகவள்ளி என்ன யோசனையில் இருக்க என்று கேட்க நான் ஹாஸ்பிடல் வரைக்கும் போயிட்டு வருகிறேன் என்று பணத்துடன் கிளம்பி வருகிறாள்.
யாரா இருக்கும்: இந்த நேரம் பார்த்து மனோகரிக்கு ரூம் பாய் வேறு எண்ணில் இருந்து போன் போட்டு, மேடம் நான் ரூம் பாய் பேசுகிறேன் என்றதும், என்ன திமுருடா உனக்கு என்னையே மிரட்டுறியா என்று சொல்ல, மேடம் நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்க. நேற்று ஓட்டலுக்கு ஒரு பொண்ணு வந்தா அவள், உங்களை பற்றியும், அன்னைக்கு ஓட்டலில் நடந்தது பத்தியும் கேட்டதால், நான் பயந்து போய் அங்கிருந்து ஓடிவந்துவிட்டேன். அப்போது என் போனை அங்கே விட்டுவிட்டு வந்துவிட்டேன் என்று சொல்கிறான்.

சுடரை துரத்தும் ரவுடிகள்: இதைக் கேட்டு அப்போ உன் போன்ல இருந்து எனக்கு போன் பண்ணது யாராக இருக்கும் என்று யோசித்த மனோகரி, ரவுடிக்கு போன் போட்டு அந்த பொண்ணு வர சொன்ன இடத்திற்குச் சென்று அந்த பெண் யார் என்று பாருங்கள் என்று சொல்ல, அந்த இடத்தில் சுடரைப் பார்த்த ரவுடிகள் அது சுடர் என்று சொல்கின்றனர். சுடருக்கு என்னை மிரட்டும் அளவிற்கு திமிரு வந்துடுச்சா, இனி மேல் இவள் உயிரோடு இருக்கக்கூடாது என்று ரவுடிகளிடம் அவளது கதையை முடிக்க சொல்கிறாள். இதையடுத்து ரவுடிகள் ரோட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவளை கொல்ல துரத்துகின்றனர். இதைப் பார்த்த இந்துவின் ஆவி சுடரை காப்பாற்றுவதற்காக அவளது உடம்புக்குள் புகுந்து ரவுடிகளை அடித்து துரத்துகிறாள்.
குழப்பமான மனோகரி: பிறகு வீட்டுக்கு வந்த சுடர், மனோகரியை பார்த்து என்ன மனோகரி எப்படி இருக்க என்று கேட்க மனோகரி இவ ஏன் இப்படி பேசிட்டு போறா என்று குழப்பம் அடைகிறாள். இந்துவின் ஆத்மாவுடன் வீட்டுக்குள் நுழைந்த சுடரை பார்த்த அஞ்சலி ட்ராயிங் பண்ணி இருக்கேன் வந்து எப்படி இருக்குனு சொல்லு என்று கூப்பிடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











