மணக்கோலத்தில் சுடர்.. கனவில் வந்தது யார்? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், எழில் , மனோகரியின் திருமணத்தை நிறுத்த சுடர், ராமையா இருவரும் பிளான் போடுகின்றனர். இதையடுத்து,சாமியாராக வேஷம் போட்ட, ராமையா மனோகரியை தலைக்கு மேல் கையை தூக்கிக்கொண்டு கும்பிடு போட்டு கொண்டு துளசி மாடத்தை சுற்ற வேண்டும் என்றும், தீ அலகு குத்தி தீ சட்டி எடுக்க சொல்லி கொடுமைப்படுத்துகிறான். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து இன்றைய எபிசோடில், சுடர் தன்னுடைய தோழிக்கு போன் போட்டு போனை ஹேக் பண்ண தெரிஞ்சவங்க யாராவது இருந்தா சொல்லு என்று விசாரிக்கிறாள். அடுத்ததாக அஞ்சலி சோகமாக வர சுடர் என்னாச்சு என்று கேட்க அஞ்சலி அப்பாவும் மனோகரி ஆண்டியை கல்யாணம் பண்ணிக்கிறது பிடிக்கல என்று சொல்கிறாள். அதுதான் இந்த கல்யாணத்தை நடக்க விடமாட்டேன் என்று சொல்லி இருக்கேன்ல என்று ஆறுதல் சொல்ல அஞ்சலி நீ எங்க நாலு பேரையும் நல்லா தானே பாத்துக்குற.. நீயே எங்க அப்பாவ கல்யாணம் பண்ணிக்கோ என்று சொல்ல சுடர் ஷாக் ஆகிறாள்.

Zee tamil Ninaithen Vandhai

பின் சுடர் தூங்கிக் கொண்டிருக்க மணக்கோலத்தில் இருக்கும் அவளுக்கு யாரோ மெட்டி போட்டு விடுவது போல கனவு வர அதிர்ச்சி அடைந்து எழுந்திருக்கிறாள். காலையில் இதே கனவை நினைத்துக் கொண்டு கனகவள்ளி, செல்வி, ராமையா என யார் கூப்பிடுவதையும் கண்டு கொள்ளாமல் புலம்பியபடி அங்கும் இங்கும் நடந்து செல்கிறாள்.

கடுப்பான மனோகரி: அடுத்ததாக மனோகரி எழிலுடன் ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் நடத்த திட்டம் போட குழந்தைகள் இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என தொடர்ந்து இடையூறு செய்து இருவரும் சேர்ந்து போட்டோ எடுக்க விடாமல் செய்கின்றனர். கடைசியாக ஒரே ஒரு குரூப் போட்டோ மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என முடிவெடுத்து அனைவரையும் கூப்பிட சுடரும் குரூப் போட்டோவில் நிற்க வர மனோகரி அவளது காலால் சுடரை தட்டி விட்டு கீழே விழ வைக்க பிளான் போடுகிறாள். ஆனால் எதிர்பாராத விதமாக எழில் அவளை தாங்கி பிடித்து என்ன ஆச்சு சுடர் காலில் சுளுக்கு பிடிச்சி இருக்கா என்று ஒவ்வொரு விரலாக பிடித்து சுளுக்கு எடுக்க மனோகரி இதை பார்த்து கடுப்பாகிறாள். சுடருக்கு எழில் நடந்து கொள்வதும். கனவில் வந்ததும் ஒரே மாதிரி இருப்பதால் குழப்பமடைந்து திடீரென காலை இழுத்துக் கொண்டு ஒன்னும் இல்லை என்று சொல்லி விடுகிறாள்.

அடுத்து நடக்கப்போவது என்ன: அடுத்ததாக சுடர், அங்கு சந்தேகமாக சுற்றி வந்த ரூம் பாயை பார்க்க செல்ல அவன் சுடரை பார்த்ததும் எஸ்கேப் ஆக முயற்சி செய்ய ஓடும் போது போனைத் தவற விடுகிறான். அந்த போனை எடுக்கும் சுடர் மனோகரிக்கு போன் போட்டு ஒரு சாஃப்ட்வேர் உதவியுடன் ஆண் குரலில் பேசுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X