இந்து ஆவியை உணரும் மனோகரி..அடுத்து செய்ய போவது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் !
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், சுடரை பார்க்க அவரது அப்பா வீட்டுக்கு வர இந்து அவரைப் பார்க்க அவரது கண்ணுக்கு இந்து தெரிவது போலவே தோன்றுகிறது. இந்த நேரத்தில் சுடர் வெளியே வருகிறாள். சுடரின் அப்பா வருவதை பார்த்த குழந்தைகள் தாத்தா நாங்க உங்ககிட்ட பேசியிருக்கோம் என்று சுடரை காப்பாற்றிய விஷயத்தை சொல்ல அவர் நன்றி கூறுகிறார்.
கனகவல்லி நீங்கள் போய் விளையாடுங்க அவங்க தனியா பேசட்டும் என்று குழந்தைகளை அனுப்பி விட சுடரிடம் உங்க அக்கா சென்னைல தான் இருக்கா அந்த லேடி மீட் பண்ண வர்றதா சொல்லி இருக்காங்க என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், எழில் உட்கார்ந்து இருக்க இந்து எழில் அருகே படுத்துக்கொண்டு இருக்கிறாள். அப்போது அங்கு வரும் மனோகரி, ஒரு டாக்டருக்கு ஏதோ சந்தேகமாம் உன்னிடம் பேச வேண்டும் என்று சொன்னார் என்று சொல்லி போனை கொடுத்துவிட்டு, எழிலை காதல் பார்வை பார்க்கிறாள். இதைபார்த்துக்கொண்டு இருக்கும் இந்து, மனோகரியின் அருகே சென்று அவளைப் பார்த்து முறைக்கிறாள். இதனால், மனோகரிக்கு ஏதோ ஒரு உணர்வு வர அவள் பயப்படுகிறாள்.
பயந்த மனோகரி: பின் தோட்டத்தில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டு இருக்கிறாள் சுடர் அப்போது, மனோகரி அங்கு வந்து உட்கார சுடர் பக்கத்திலேயே அமர்ந்து அவளை முறைத்தபடி உட்கார்ந்திருக்கிறாள் இந்து, மனோகரிக்கு இந்து அங்கு உட்கார்ந்திருப்பதை போல் தோன்றுகிறது. இதையடுத்து பயந்து போய் வெளியே வருகிறாள் மனோகரி. செல்வியிடம் விஷயத்தை சொல்கிறாள்.

திருட்டு சாமியார்: செல்வி எனக்கு தெரிந்த ஒரு சாமியார் இருக்கிறார், அவரை வீட்டுக்கு வர வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல மறுநாள் சாமியாரும் வீட்டிற்கு வருகிறார். ஆனால் போலி சாமியாரான அவர் வீட்டில் உள்ள பொருட்களை திருடும் வேலைகளை செய்கிறார். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











