இந்துவை அழிக்க மனோகரி செய்த பூஜை.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட் அப்டேட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், மனோகரி இந்துவின் ஆவி வீட்டில் இருப்பதை உணருகிறாள். இதனால் பயந்து போன மனோகரி செல்வியிடம் விஷயத்தை சொல்கிறாள்.

செல்வி எனக்கு தெரிந்த ஒரு சாமியார் இருக்கிறார், அவரை வீட்டுக்கு வர வைக்க ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல மறுநாள் சாமியாரும் வீட்டிற்கு வருகிறார். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Ninaithen Vandhai Ganesh Venkatram Jasmine Rath

நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில், போலி சாமியார் பேயை ஓட்டுவதாக சொல்லி ரூம் ரூமாக சென்று திருட்டு வேலைகளை செய்ய இதை கவின் பார்த்து விடுகிறான், என்ன திருடுனீங்க என்று கேட்க அந்த சாமியார் கவினை அடிக்க அவன் மயங்கி விழந்து விடுகிறான். இதைப்பார்த்துக்கொண்டிருந்த இந்துவிற்கு ஆத்திரம் வந்து அந்த சாமியாரை அடித்து துரத்த சத்தம் கேட்டு மனோகரியும் செல்வியும் ஓடி வந்து பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இதையெல்லாம் பேயோட வேலை என்று பயப்படுகின்றனர்.

இன்றைய எபிசோடு: இதையடுத்து மனோகரி உண்மையான சாமியார் ஒருவரை சந்தித்து நடந்த விஷயத்தை சொல்ல அவர் நீ எதோ தப்பு பண்ணி இருக்க, உன்னால இந்த உலகத்தை விட்டு போன உயிர் திரும்ப வந்து இருக்கு. இதில் இருந்து தப்பிக்க ஒரு வழி இருக்கு என்று சொல்லி மஞ்சளை தருகிறார். நாளைக்கு இரவு 8 மணியுடன் சந்திர கிரகணம் முடியுது. அந்த கிரகணம் முடிவதற்குள் நீ இந்த மஞ்சளை பூஜை செய்த தண்ணீரில் முழுசாக கரைத்துவிட வேண்டும். கிரகணம் முடியும் நேரம் வரைக்கும் இந்த மஞ்சள் கொஞ்சம் கொஞ்சமா கரையணும். அப்படி செய்தால் அந்த ஆத்மாவால் வீட்டிற்குள் வர முடியாது என்று சொல்கிறார்.

அடுத்து நடப்பது என்ன: அதே சமயம் இந்த மஞ்சளை அந்த ஆவியோடு ரத்த சம்மந்தம் இருக்கவங்க யாரும் தொட கூடாது என்றும் சொல்லி கொடுத்து அனுப்ப வீட்டிற்கு வந்த மனோகரி பூஜைக்கான வேலையை தொடங்குகிறாள். ரூமில் எழில், இந்து ஞாபகத்தில் கலங்கி அழுகிறான். இந்துவின் ஆவி அவனை கட்டியணைக்க அதை உணரும் எழில் நீ இங்க தான் இருக்க இந்து என்று கத்திக்கொண்டே வெளியில் வந்து தேடி அலைய மழையில் நனைந்து விடுகிறான். அதற்குள் மனோகரி பூஜையை முடித்து பானையையும் மஞ்சளையும் சாமியார் சொன்னது போல் வைத்து விட இந்துவால் வீட்டிற்குள் நுழைய முடியாமல் போகிறது. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X