ஜோசியர் கொடுத்த அதிர்ச்சி.. சுடர் மீது கோபப்பட்ட இந்து.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், ஹாஸ்டல் வார்டன் எழிலுக்கு போன் செய்கிறார். ஆனால், எழில் போனை எடுக்காத நிலையில் மனோகரிக்கு போன் செய்து இந்துவோட குடும்பம் கிடைச்சிட்டாங்க, அவங்க தங்கச்சி மற்றும் அப்பாவோட போட்டோ கிடைச்சிருக்கு, எழில் சாருக்கு அனுப்பவா என்று கேட்க மனோகரி தனக்கு அனுப்பி வைக்க சொல்கிறாள். ரவுடிக்கு போன் செய்து ஹாஸ்டல் வார்டனை போட்டு தள்ள சொல்கிறாள்.
சுடர் எழிலுக்காக ஜூஸ் போட போக அப்போது அவளது விரலை வெட்டி கொள்ள அவளது ரத்தம் மஞ்சள் மீது பட்டு மனோகரின் பூஜை நாசமாகிறது. மஞ்சள் கருப்பாக மாற இந்துவின் ஆத்மா மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து விடுகிறது. சுடர் எழிலை கவனித்து கொள்வதை இந்து மறைந்து இருந்து பார்க்கிறாள். செல்வியும் மனோகரியும் மஞ்சள் கருப்பாக மாறியதை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இதையடுத்து இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இதையடுத்து, இன்றைய எபிசோடில், வார்டன் வந்து கொண்டிருக்கும் வழியில் மனோகரி ஏற்பாடு செய்த ஆள் ஆக்சிடென்ட் செய்து அவரது போனை எடுத்து போட்டோவை மனோகரிக்கு அனுப்பி வைக்கிறாள். போட்டோவை பார்த்த மனோகரி பேரதிர்ச்சி அடைகிறாள். இதையடுத்து, உடனடியாக சுடரை இந்த வீட்டை விட்டு துரத்தியாகணும் என்று முடிவெடுத்து ஒரு ஏஜென்சிக்கு போன் செய்து சுடர் பேருக்கு உடனடியாக விசா ரெடி பண்ண சொல்கிறாள். அடுத்து, இந்து தீபாவிடம் சுடர் எதுக்கு எழிலை தொட்டு தொட்டு பேசணும்? இதெல்லாம் சரியே இல்ல என்று சொல்லி கோபப்பட்டு பேசி கொண்டிருக்கிறாள்.
கோபப்படும் எழில்: இந்த நேரத்தில் சுடர் அங்கு வந்து, இந்து இந்துனு சொல்லிட்டே இருக்காரு என்று சொல்ல இந்து இதை கேட்டதும் அவசரப்பட்டு தப்பா பேசிட்டோமே என்று பீல் பண்ணுகிறாள். பிறகு கனகவல்லி ஜோதிடரை வீட்டிற்கு வர வைக்கிறாள். வீட்டிற்கு வந்த ஜோசியர் குழந்தைகளின் ஜாதகத்தை பார்த்து முடித்ததும் கனகவல்லி எழிலோட ஜாதகத்தை கொடுத்து பார்க்க சொல்ல எழில் எதுக்கு இதெல்லாம் கோபப்படுகிறாள். பிறகு ஜோசியர் ஜாதகத்தை பார்த்து எழிலுக்கு உடனடியாக கல்யாணம் பண்ணி ஆக வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டு எழில் ஷாக்காக மனோகரி சந்தோசப்படுகிறாள். இப்படியான நிலையில் அடுத்தடுத்து என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











