எழில் எனக்கு புருஷன் மாதிரி.. பூஜையில் நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!

சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், இந்துவின் ஆவியை விரட்ட மனோகரி பூஜை செய்கிறாள். அந்த பூஜை நடக்கும் போது, சுடர் எழிலுக்காக ஜூஸ் போட போக அப்போது அவளது விரலை வெட்டி கொள்ள அவளது ரத்தம் மஞ்சள் மீது பட்டு மனோகரியின் பூஜை நாசமாகிறது. மஞ்சள் கருப்பாக மாற இந்துவின் ஆத்மா மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து விடுகிறது.

வீட்டில் நடக்கும் பிரச்சனையை பார்த்து, கனகவல்லி ஜோதிடரை வீட்டிற்கு வர வைக்கிறாள். வீட்டிற்கு வந்த ஜோசியர் குழந்தைகளின் ஜாதகத்தை பார்த்து முடித்ததும் எழிலோட ஜாதகத்தை பார்க்கிறார். அவர் எழில் உடனடியாக கல்யாணம் பண்ணி ஆக வேண்டும் என்று சொல்கிறார். இதை கேட்டு எழில் ஷாக்காக மனோகரி சந்தோசப்படுகிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Zee tamil Ninaithen Vandhai Ganesh Venkatram Jasmine Rath

இந்துவின் தாலி: நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில், பூஜைக்கான ஏற்பாடுகள் நடக்க அஞ்சலி, இன்னைக்கு எப்படியாவது ஸ்கூல் கட் அடிக்கணும் என்று திட்டம் போட்டு சுடர் ரூமுக்குள் வந்து ஒளிந்துக்கொள்கிறார். இதை சுடர் பார்த்து விட, அஞ்சலி சுடர் தாலி வைத்திருக்கும் பேக்கை எடுத்து கொண்டு ஓடி பொய் எழில் ரூமில் ஒளிந்து கொள்கிறாள். சுடர் எழில் ரூமுக்குள் போக முடியாமல் வெளியே நின்றபடி அஞ்சலி வெளியே வா ஸ்கூல் போகணும் என்று சொல்லி கூப்பிட்டு கொண்டிருக்க எழில் வர அஞ்சலி கையில் இருக்கும் தாலியை துணிக்குள் மறைத்து விடுகிறாள். பிறகு எழில் அஞ்சலியை ஒழுங்காக ஸ்கூலுக்கு போகணும் என்று மிரட்டி அனுப்பி வைக்கிறாள்.

அதிர்ச்சியில் எழில்: இதை தொடர்ந்து பூஜைக்காக தயாராகும் எழில் வேட்டி சட்டை அணிந்து தோளில் துண்டு போட்டு கொண்டு தயாராக அஞ்சலி, மறைத்து வைத்த தாலி எழிலின் துண்டுக்குள் மாட்டி கொண்டு தொங்குகிறது. எழில் இதை கவனிக்காமல் இருக்கிறான். பிறகு எழில் வந்து பூஜையில் உட்கார அய்யர் புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் சேர்ந்து தான் இந்த பூஜையை செய்யணும் என்று சொல்ல எழிலும், கனகவல்லியும் அதிர்ச்சி அடைகின்றனர், கனகவல்லி எழில் மட்டும் தனியாக பண்ண கூடாதா என்று கேட்க ஜோடியாக உட்கார்ந்து பண்ணுறது தான் முறை என்கிறார்.

புருஷன் மாதிரி: இதைக்கேட்டுக்கொண்டிருந்த மனோகரி நான் எழில் பக்கத்துல உட்க்காருறேன், அவர் எனக்கு புருஷன் மாதிரி தான் என்று சொல்ல எல்லாரும் அதிர்ச்சி அடைகின்றனர், கனகவல்லி நீ என்னமா பேசுற, என்று கேட்க ஆமாம் மா எழிலும் நானும் சின்ன வயசுல இருந்தே ப்ரண்ட்.. அவன் மனைவிக்கு பதிலா நான் உட்காரதுல என்ன தப்பு இருக்கு என்று கேட்டு பக்கத்தில் உட்கார போக வெளியில் இருந்து ஆவியாக பார்க்கும் இந்து அதிர்ச்சி அடைகிறாள். மனோகரி அமர்ந்ததும் எழில் எழுந்து விட மனோகரி அதிர்ச்சி அடைகிறாள்.

இந்துவின் போட்டோவிற்கு பூஜை: என் மனைவியோட இடத்தை யாருக்கும் தர மாட்டேன் என்று சொல்லி மேலே சென்று இந்துவின் போட்டோவை கொண்டு வர இதை பார்த்த இந்துவின் ஆவி, என் கணவர் இன்னும் என்னை மறக்கவில்லை, நான் உங்க மனசுல வாழ்ந்துட்டு தான் இருக்கேனா என்று சந்தோசப்படுகிறாள். பிறகு எழில் பூஜையில் இந்து போட்டோவை வைத்து பக்கத்தில் உட்கார்ந்து பூஜையை செய்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X