வீட்டில் நடக்கும் பூஜை.. மனோகரி போடும் திட்டம்.. நடந்தது என்ன? நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், வீட்டில் நடந்த பூஜையை புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் சேர்ந்து தான் செய்யணும் என்று சொல்ல எழிலும், கனகவல்லியும் அதிர்ச்சி அடைகின்றனர், அப்போது மனோகரி நான் எழில் பக்கத்துல உட்காருறேன், அவர் எனக்கு புருஷன் மாதிரி தான் என்று சொல்லிக்கொண்டு, எழிலும் நானும் சின்ன வயசுல இருந்தே ப்ரண்ட்.. அவன் மனைவிக்கு பதிலா நான் உட்காரதுல என்ன தப்பு இருக்கு என்று கேட்டு பக்கத்தில் உட்காருகிறாள்.
அப்போது எழில், என் மனைவியோட இடத்தை யாருக்கும் தர மாட்டேன் என்று சொல்லி மேலே சென்று இந்துவின் போட்டோவை கொண்டு வந்து, போட்டோவை வைத்து பக்கத்தில் உட்கார்ந்து பூஜையை செய்கிறான். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

இன்றைய எபிசோட்: நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோடில், எழில் இந்துவின் போட்டோவை வைத்து பூஜை செய்ததால், பபக்கத்தில் உட்கார ஆசையாக காத்திருந்த மனோகரி கடுப்பாகி கோபம் அடைகிறாள். இதனால், இந்த பூஜை நல்லபடியா நடக்கக்கூடாது என்று முடிவெடுக்கிறாள். பிறகு செல்வியிடம் ஒருவகையான லிக்யூடை கலந்த நெய்யை கொடுத்து அதை போட்டோவின் மீது கொட்ட சொல்கிறாள்.
பதறும் இந்து: மறுபக்கம், சுடர் வீட்டுக்கு வர இதை பார்த்த இந்துவின் ஆவி பதறுகிறது. சுடர் போட்டோவை பார்த்துவிட்டால் நான் உயிரோட இல்ல என்ற விஷயம் தெரிந்துவிடுமே என நினைக்கும் இந்து, சுடர் வீட்டுக்குள் நுழையும் சமயத்தில், அவளை தடுத்த நிறுத்தி தீபா கீழ விழுந்துவிட்டால், அவளுக்கே கால்ல பயங்கரமான அடி வலியில் துடிச்சுக்கிட்டு இருக்கா.. நீ என் கூடவே வந்தேனா அவளை தூக்கி பெட்ல படுக்க வைத்துவிட்டு காலுக்கு கொஞ்சம் சுடுதண்ணி ஒருத்தரும் கொடுத்துட்டு வரலாம் என்று சொல்லி அழைத்துச் செல்கிறாள்.
டான்ஸ் ஆடும் தீபா: இருவரும் வீட்டுக்கு வர அங்கு தீபா டான்ஸ் ஆடிக்கொண்டிருப்பதை பார்த்த சுடர், என்ன அடிபட்டு இருக்குனு சொன்னீங்க, டான்ஸ் ஆடிட்டு இருக்காங்க என்று கேட்க, இந்து அது டான்ஸ் இல்ல வலியில துடிக்கிறா என்று சமாளிக்கிறாள். பிறகு தீபாவுக்கு சுடர் சுடு தண்ணீரில் ஒத்தரம் கொடுத்துவிட்டு கிளம்ப முயற்சி செய்ய தீபா தலை வலிக்குது என்று காபி கேட்கிறாள். சுடர் காபி போட போகும் நேரத்தில் தீபாவுக்கு ஹவுஸ் ஓனர் போன் பண்ண பதறிப் போய் அவள் கெட்டப்பை மாற்றி ஓனரிடம் வீடியோ காலில் பேச ஓடிவிடுகிறாள். இதைப்பார்த்த சுடர் என்ன இது என்று கேட்க இந்துவின் ஆவி, உன் கை வைத்தியம் அப்படி என்று சொல்லி சமாளிக்கிறாள்.
அடுத்து நடப்பது என்ன: மறுபக்கம் செல்வி மனோகரி சொன்னது போல நெய்யை கொண்டு வந்து இந்துவின் போட்டோ மீது ஊற்றி விடுகிறாள். நெய் என்பதால் கை வழுக்கி விட்டதாக பொய் சொல்லி சமாளிக்கிறாள். அந்த நேரம் பார் பார்த்து சுடர் உள்ள நுழைய, கனகவல்லி அவளைப் பார்த்தடிரஸ் மாத்திட்டு ரெடியாகிட்டு வா என்று சொல்லி அனுப்பி வைக்க ரூமுக்கு வந்த சுடர்,எழில் எடுத்து கொடுத்த புடவையை கட்டிக் கொள்கிறாள். பிறகு சுடர் கீழே இறங்கி வர இதைப்பார்த்த மனோகரிக்கு இந்துமதி இறங்கி வருவது போல் தெரிய அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











