சுடர் கழுத்தில் விழுந்த தாலி..ஆரம்பமாகும் புது அத்தியாயம்.. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!
சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், ஒரு பக்கம் இந்து, சுடர் தன் போட்டோவை பார்த்துவிட்டால், தான் ஆவி என்பது தெரிந்துவிடும் என்று பதற்றப்பட்டு சுடரை பூஜைக்கு செல்லவிடாமல் நடுக்க முயற்சி செய்து கொண்டு இருக்கிறாள்.
மறுபக்கம் மனோகரி பூஜையை கெடுக்க திட்டம் போட்டு, இந்துவின் போட்டோ மீது நெய் ஊற்றி விடுகிறாள். நெய் என்பதால் கை வழுக்கி விட்டதாக பொய் சொல்லி சமாளிக்கிறாள். அந்த நேரம் சுடர், எழில் எடுத்து கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு வருகிறாள். பிறகு சுடர் கீழே இறங்கி வர இதைப்பார்த்த மனோகரிக்கு இந்து இறங்கி வருவது போல் தெரிய அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இப்படியான நிலையில் இன்று என்ன நடக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நினைத்தேன் வந்தாய்: இன்றைய எபிசோடில், சுடர் எழிலோட மனைவி போட்டோவ பார்க்க முயற்சி செய்ய மனோகரி, போட்டோவை மறைக்கும் விதமாக, போய் எல்லாருக்கும் காபி கொடு என்று சொல்லி அனுப்பி வைத்து விட்டு போட்டோவை மறைத்தபடி பாவனை செய்கிறாள். இதையடுத்து, திடீரென போட்டோ தீப்பற்றி எறிய அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். பற்றி எரியும் போட்டோவை எடுக்க எழில் முயன்ற போது, கனகவல்லி அதை தடுத்துவிடுகிறாள்.
கையில் தீக்காயம்: சமையல் அறையில் இருந்து இதை பார்த்துக்கொண்டிருந்த சுடர் ஓடி வந்து போட்டோவை எடுத்து தீயை அணைக்க அவளது கையில் தீக்காயம் பட்டுவிடுகிறது. பிறகு கனகவல்லி சுடரை கூட்டிச் சென்று முதலுதவி செய்யு சொல்ல எழில் தனது தோளிலிருந்த துண்டால் சுடர் கையில் கட்டு போட்டு ரூமுக்கு அழைத்துச் சென்று மருந்து போட்டுவிட்டு, இந்து இன்னமும் என் கூட வாழ்ந்துட்டு தான் இருக்கா அவளோட போட்டோவை தீயிலிருந்து காப்பாத்திட்ட.. இந்த உதவியை நான் என்னைக்கும் மறக்கவே மாட்டேன் என்று நன்றி சொல்கிறான்.
அபசகுணம்: இதையடுத்து சுடர் கீழே இறங்கி வர எழில் வேறொரு துண்டை எடுத்து தோள் மீது போட்டுக் கொண்டு வர அந்த துண்டில் இந்துவின் தாலி மாட்டிக் கொண்டிருக்கிறது. போட்டோ பற்றி எரியுது அபசகுணம் மாதிரி தெரியுது என்று பூஜைக்கு வந்தவர்கள் சொல்ல, பூசாரி இது அபசகுணம் இல்ல இதுவும் நல்லது தான் இந்த வீட்டோட திருஷ்டி மொத்தமும் அக்னி பகவானால் எரிந்து போய்விட்டது இனி எல்லாமே நல்லதா தான் நடக்கும் என்று சொல்கிறார்.
கழுத்தில் விழுந்த தாலி: அதன் பிறகு எழில் வந்து மீண்டும் பூஜையில் உட்கார பூசாரி எழிலின் துண்டை விரிக்க சொல்லி பூ பழம் உள்ளிட்டவற்றை வைத்து மொட்டை மாடிக்கு சென்று மனைவியை வேண்டிக் கொண்டே காற்றில், பூ பழத்தை தூவி விடுமாறு சொல்ல எழிலும் மொட்டை மாடிக்கு வந்து அப்படியே செய்கிறான். துண்டை உதறியதும் அதிலிருந்த தாலி காற்றில் பறந்து வர, கீழே குழந்தைகளோடு விளையாடிக்கொணடிருந்த சுடர் கழுத்தில் வந்து விழுகிறது. ஆனாலும் சுடர் அதை கவனிக்காமல் குழந்தைகளோடு விளையாடிக் கொண்டிருக்கிறாள்.
அடுத்து நடப்பது என்ன: அதன் பிறகு பூசாரி அனைவருக்கும் அட்சதை கொடுக்க சொல்லி எழிலுக்கு ஆசீர்வாதம் செய்யும் போது குழந்தையின் பந்து வீட்டுக்குள் உருண்டு வர அதை எடுக்க சுடர் ஓடி வர அவளும் எழிலோடு சேர்ந்து ஆசீர்வாதம் வாங்குவது போல் சூழ்நிலை மாறுகிறது. பிறகு பூஜை முடித்த ஐயர் வீட்டுக்கு கிளம்பும்போது வெளியே இருந்த சுடர் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க போக தாலி வந்து தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைகிறாள். இது என்னுடைய தாலி இல்லை என்று கழட்ட போக ஐயர் கழட்டாத அந்த தாலி உன் கழுத்துக்கு வந்து இருக்குன்னா அதுக்கு ஏதோ ஒரு காரணம் இருக்கு. அந்த தாலியை கழட்டுனா தாலிக்கு சம்பந்தப்பட்டவங்களுக்கு ஏதாவது ஆபத்து வரும் என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.


Click it and Unblock the Notifications











